நிலையான வருமான மியூச்சுவல் ஃபண்ட்கள் என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நிலையான வருமான மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பவை, அரசாங்க செக்யூரிட்டிகள், கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்டுகள், பிற பணச் சந்தை இன்ஸ்ட்ருமென்ட்கள் போன்ற நிலையான வருமானம் கொடுக்கும் செக்யூரிட்டிகளைக் கொண்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களாகும். இவற்றை பொதுவாக டெப்ட் ஃபண்ட்கள் என்றும் அழைக்கிறோம். கார்ப்பரேட் பாண்டு ஃபண்ட்கள், டைனமிக் பாண்டு ஃபண்ட்கள், பேங்கிங் & PSU டெப்ட் ஃபண்ட்கள், உயர் பாதுகாப்பு(ஜில்ட்) ஃபண்ட்கள், லிக்விட் ஃபண்ட்கள் முதலிய அனைத்தும் நிலையான வருமான ஃபண்ட்கள் என்பதன் கீழ் வரும்.

நிலையான வருமான மியூச்சுவல் ஃபண்டின் பொதுவான அம்சங்கள்:

நிலையான வருமான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும்: இவை பாண்டுகள், பிற நிலையான வருமான செக்யூரிட்டிகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் ரிட்டர்ன்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருக்கும்.

மார்க்கெட் ஏற்ற இறக்கம் குறைவு: நிலையான வருமான செக்யூரிட்டிகளின் ஏற்ற இறக்கத் தன்மை குறைவு, மார்க்கெட் ஏற்ற இறக்கங்களால் குறைவாகவே பாதிக்கப்படும்.

டைவர்சிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ: டெப்ட் ஃபண்ட்கள் டெப்ட், பணச் சந்தை இன்ஸ்ட்ருமென்ட்கள் (கமர்ஷியல் பேப்பர்கள், ட்ரெஷரி பில்கள் போன்றவை) ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யப்படும். இதனால் டெப்ட் ஃபண்டின் டைவர்சிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ என்ற சிறப்புப் பண்பின் பலனால் வங்கியில் டெபாசிட் செய்வதைவிட அதிக ரிட்டர்ன்கள் கிடைக்கலாம். 

நிலையான வருமான ஃபண்ட்களின் இன்னும் சில சிறப்பம்சங்கள்:

  • டெப்ட் ஃபண்ட்களுக்கு ஸ்கீமில் உள்ள பாண்டுகள் மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து வட்டி கிடைக்கிறது, அதோடு விலையும் ஏறும் வாய்ப்புள்ளது. 
  • அது மட்டுமின்றி, இந்த ஃபண்ட்களுக்கு பொதுவாக லாக்-இன் கால வரம்பு கிடையாது. அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஃபண்டிலிருந்து பணத்தை எடுக்க முடியும். பணத்தை எடுப்பதற்கு கட்டணங்கள் (எக்ஸிட் லோடு) மற்றும் பிற செலவுகள் இருக்கலாம்.
  • நிலையான வருமான ஃபண்ட்களை (ஈக்விட்டிகள் போன்ற) மற்ற வகை மியூச்சுவல் ஃபண்ட்களுடன் ஒப்பிட்டால், நிலையான வருமான ஃபண்ட்கள் குறைந்த ரிஸ்க் கொண்டவையாக உள்ளன. இது உங்கள் போர்ட்ஃபோலியோவை பேலன்ஸ் செய்து ஒட்டுமொத்த ரிஸ்க்கைக் குறைப்பதன் மூலம், உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு நிலைத்தன்மையையும் வழங்குகிறது. 

இருந்தாலும், இந்த ஃபண்ட்கள் ரிஸ்க்கே இல்லாதவை என்று அர்த்தமல்ல. இந்த ஃபண்ட்களிலும் அவற்றுக்கே உரிய ஓரளவு ரிஸ்க் இருக்கவே செய்கிறது. 

பொறுப்புதுறப்பு: பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்