ETF-இன் வரம்புகள் என்னென்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ETFகள் செயலற்ற முதலீட்டு கருவிகளாகும். அவை அடிப்படைக் இன்டெக்ஸைப் பின்தொடர்ந்திடும் மற்றும் பங்குகளைப் போலவே பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்கின்றன. ஆனால் ETFகளை தரகர் மூலம் எக்ஸ்சேஞ்சில் இருந்து வாங்கி விற்க வேண்டும். ETFகளில் வர்த்தகம் செய்ய உங்களுக்கு டீமேட் கணக்கு தேவை மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தரகருக்கு கமிஷன் செலுத்த வேண்டும். ETFகளின் நிகழ்நேர வர்த்தகத்தின் பலன்களைப் பெறுவதற்காக அவற்றில் முதலீடு செய்ய விரும்பினால், கமிஷன் செலவு காலப்போக்கில் உங்கள் வருமானத்தைக் குறைக்கலாம். 

இரண்டாவதாக, SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் கிடைக்கும் ருபீ-காஸ்ட் ஆவரேஜிங்கின் நன்மையை ETFகள் வழங்குவதில்லை. நீங்கள் ETFகளில் வழக்கமான முதலீடு செய்ய விரும்பினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கமிஷன் செலவை நீங்கள் ஏற்க வேண்டும். முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யும்படியான குரோத் மற்றும் டிவிடென்ட் தேர்வு போன்ற அம்சங்களை ETFகள் வழங்குவதில்லை. உதாரணமாக, வழக்கமான வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்ற நபர்களின் தேவையை அல்லது வழக்கமான அடிப்படையில் டிவிடென்ட் பேஅவுட்டைப் பெற விரும்பும் நபர்களின் தேவையை ETFகளால் பூர்த்திசெய்ய முடியாது.

சில ETFகள் மிகவும் குறிப்பானவையாக அல்லது துறை சார்ந்தவையாக உள்ளன. மேலும் அவை மிகவும் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்யப்படுகின்றன. ETFகளில் பரிவர்த்தனை செய்யும்போது முதலீட்டாளர்கள் ஏலக் கேட்பில் உள்ள விலை மாறுபாடுகளை எதிர்கொள்ளலாம் (அதாவது, அதன் NAV-யிலிருந்து ETF-இன் தற்போதைய விலையின் விலகல் - bid/ask spread). குறுகிய காலத்திற்குள் அதிக ரிட்டர்னை அளிக்கக்கூடிய இன்ட்ரா டே வர்த்தக வாய்ப்புகளை ETFகள் வழங்கும் அதேநேரத்தில், நீண்டகால ரிட்டர்ன்களை எதிர்நோக்கும்போது பெரிதும் பலனளிக்காமல் போகலாம். 
 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்