ஓவர்நைட் ஃபண்டுகள் என்பவை யாவை?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்களிலேயே மிகவும் பாதுகாப்பான வகை ஃபண்ட்களாகக் கருதப்படுபவை ஓவர்நைட் ஃபண்ட்களாகும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுக்குப் புதியவராக இருந்து, முழுவதுமாக அதில் இறங்கும் முன்பு முதலில் சிலவற்றை முயற்சி செய்து பார்க்க விரும்பினால், ஓவர்நைட் ஃபண்ட்கள் அதற்கு சரியான வழியாக இருக்கும். 

ஓவர்நைட் ஃபண்ட்கள் என்பவை, ஒரு வகை ஓப்பன்-என்டட் டெப்ட் ஸ்கீமாகும். இவை அடுத்த நாளே முதிர்ச்சி அடைகின்ற டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும். அதாவது, போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகள் ஒவ்வொரு நாளும் முதிர்ச்சியடையும். அதில் கிடைக்கும் வருமானங்களைப் பயன்படுத்தி ஃபண்ட் மேனஜர் போர்ட்ஃபோலியோவுக்காக மீண்டும் புதிய செக்யூரிட்டிகளை வாங்குவார். அவையும் அடுத்த நாளே முதிர்ச்சியடையும். இந்த ஃபண்ட்களில் உள்ள செக்யூரிட்டிகள் அடுத்த நாளே முதிர்ச்சியடைவதால், மற்ற டெப்ட் ஃபண்ட்களைப் போலவே இந்த ஃபண்ட்களும் வட்டிவிகித ரிஸ்க்குகளால் பாதிக்கப்படுபவையாக உள்ளன. ரிஸ்க் குறைவாக இருப்பதால், இவற்றிலிருந்து கிடைக்கும் ரிட்டர்னும் குறைவாகவே இருக்கும்.

வணிகம் செய்பவர்களுக்கோ புதிதாகத் தொழில் தொடங்கியவர்களுக்கோ ஓவர்நைட் ஃபண்ட்கள் ஏற்றவையாகும். அவர்கள் அதிகத் தொகையை வேறு எதற்கேனும் பயன்படுத்துவதற்கு முன்பு  மிகச் சிறிய காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவதால் அவர்களுக்கு இது பயன் கொடுக்கும். உபரியாக உள்ள தொகையை ஓவர்நைட் ஃபண்ட்களில் முதலீடு செய்து சிறிதளவு லாபம் பெறுவது நல்லது, ஒரு சில நாட்களே ஆனாலும் வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட ஓவர்நைட் ஃபண்ட்களில் வைத்திருக்கலாம். ஏதேனும் அவசரத் தேவைகளுக்காக ஒரு தொகையை ஒதுக்கிவைக்க நீங்கள் விரும்பி அதற்கான எமர்ஜென்சி ஃபண்ட் திரட்டவும் இவை மிகவும் ஏற்றவை. உங்கள் முதலீடு ஓரளவு பெருகியும் இருக்கும், அதே சமயம் இவற்றின் லிக்விடிட்டி அதிகம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் தொகை உங்கள் கைக்குக் கிடைக்கும்படியும் இருக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்