ரிட்டையர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பவை எவை?

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் என்பது நீங்கள் பணி ஓய்வு பெற்றதும் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கு உதவும்.

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பவை ஸ்டாக்குகள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யும். பணி ஓய்வுக் காலம் நெருங்கும்போது படிப்படியாக, ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யத் தொடங்கும். 

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்களின் அம்சங்கள்

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் உங்கள் பணி ஓய்வுத் திட்டங்களுக்கு ஏற்ப நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யக்கூடியதாக இருக்கும். இந்த ஃபண்ட்களில், நீங்கள் வழக்கமாக 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலங்கள் நீங்கள் முதலீடு செய்த பணத்தை அப்படியே வைத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் பணத்தை சீக்கிரமே எடுத்து செலவு செய்வது தடுக்கப்படுவதுடன், அந்தத் தொகை உங்கள் பணி ஓய்வுக் காலத்தில் உதவிகரமாக இருக்கும்.

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்களானது ஸ்டாக்குகள், பாண்டுகள், சில நேரங்களில் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் உங்கள் பணத்தைப் பரவலாக முதலீடு செய்யும். இது ரிஸ்க்குகளைக் குறைக்க உதவுவதுடன் நீண்டகால அடிப்படையில் லாபம் வழங்கக்கூடியதாகும்.

உங்கள் பணத்தை அதிகரிக்கச் செய்வது மற்றும் முதலீட்டை நிலையாக வைத்திருக்கக்கூடியது ஆகிய இரண்டு வகையான முதலீடுகளையும் இந்த ஃபண்ட்கள் சரியான விகிதத்தில் மேற்கொள்ளும். கொஞ்சம் பணத்தை ஸ்டாக்குகளிலும் கொஞ்சம் பணத்தை பாண்டுகளிலும் முதலீடு செய்வதன் மூலம் இந்த ஃபண்ட்கள் இதைச் செய்யும்.

ஸ்டாக்குகளில் முதலீடு செய்தாலும், இந்த ஃபண்ட்கள் கவனமாக இருப்பதுடன் அதிகப் பணத்தை அதில் முதலீடு செய்யாது. ஸ்டாக்குகளில் அதிகம் முதலீடு செய்யும் வழக்கமான ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது இது மாறுபட்டதாகும். பணப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

சில ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள், வரிச் சேமிப்புக்கும் உதவும். இந்த ஃபண்ட்களில் பணத்தை முதலீடு செய்யும்போது நீங்கள் குறைந்த வரியையே கட்ட வேண்டியிருக்கலாம். இதனால் நீண்டகால அடிப்படையில் பணத்தைச் சேமிக்கலாம்.

பணி ஓய்வுத் திட்டத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட்கள் நல்ல தேர்வாக இருக்குமா?

உங்கள் நிதி தொடர்பான லட்சியங்கள், ரிஸ்க்கைத் தாங்கும் மனப்பான்மை, முதலீட்டின் காலம் ஆகியவற்றைப் பொறுத்து ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் பணி ஓய்வுத் திட்டத்திற்கான சிறந்த தேர்வாக அமையலாம்.

புதிதாகத் தொடங்குபவர்களுக்கு, ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள், பொதுவாக வெவ்வேறு ஈக்விட்டி மற்றும் டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்களுக்கு இடையே பரவலாக முதலீடு செய்திடும். இது ரிஸ்க்குகளைச் சமாளிக்கவும் சாத்தியமுள்ள ரிட்டர்ன்களை வழங்கவும் உதவும்.

நீங்கள் பணி ஓய்வு வயதை அடைந்ததும், சேர்ந்த கார்பஸ் தொகையைப் பொறுத்து மாதாந்திர அடிப்படையிலோ, காலாண்டு அடிப்படையிலோ தொடர்ச்சியான கால இடைவெளிகளில் உங்களுக்குப் பணம் செலுத்தப்படும். தொடர்ச்சியாக பணம் செலுத்தப்படுவதால் பணி ஓய்வுக் காலத்தில் ஒரு நிலையான வருமானம் வரும்.

அத்துடன் உங்கள் ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்களை நிபுணர்கள் கையாள்வது உங்களுக்கு பலனளிக்கும். நீண்டகால லாக்-இன் காலத்தைக் கொண்ட குறிப்பிட்ட சில ரிட்டைர்மெண்ட் ஃபண்ட்கள் கூடுதல் நன்மையாக வரி ஆதாயத்தை வழங்குகிறது.

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்