ETFகளில் முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்குகள் என்னென்ன?

ETF களில் முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க்குகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ETFகள் குறைந்த செலவில் டைவர்சிஃபிகேஷன் நன்மைகளை அளிக்கின்றன. இந்த நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற முதலீடுகளில் உள்ள ரிஸ்க்குகளையும் கவனிக்க வேண்டும். முதலில், சர்வதேச மார்கெட் மற்றும் எக்சாட்டிக் மார்கெட் உட்பட பல மார்கெட்களில் பல வகை ETFகள் உள்ளன. ஆகவே, ETFகளுடன் இருக்கக்கூடிய அரசியல் சார்ந்த ரிஸ்க், லிக்விடிட்டி ரிஸ்க் போன்ற ரிஸ்குகளைத் தவிர்க்க, உங்கள் தேவைக்கு ஏற்ற சரியான ETF-ஐத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். ETFகளில் கவுண்ட்டர்பார்ட்டி ரிஸ்க்குக்கும் வாய்ப்புள்ளது, மேலும் அவற்றின் ஹோல்டிங்குகளைப் பொறுத்து கரன்சி ரிஸ்க்கும் இருக்கலாம்.

ETFகள் பல விதமான ஸ்ட்ரக்ச்சர்களைக் கொண்டிருக்கலாம். அவை எதில் முதலீடு செய்யப்படுகின்றன, போர்ட்ஃபோலியோவிலிருந்து கேபிட்டல் கெயின்சை அவை எப்படி டிஸ்ட்ரிபியூட் செய்கின்றன என்பதைப் பொறுத்து அதன் ஸ்ட்ரச்சர் இருக்கும். இது முதலீட்டாளரின் டேக்ஸ் சுமையைப் பாதிக்கலாம். உதாரணமாக, இன்-கைன்ட் எக்ஸ்சேஞ்ச்களைப் பயன்படுத்தும் ETFகள் கேபிட்டல் கெயின்சை முதலீட்டாளர்களுக்கு டிஸ்ட்ரிபியூட் செய்வதில்லை. ஆனால் டிரைவேட்டிவ்கள் அல்லது கமாடிட்டிகள் சம்பந்தப்பட்ட ETFகள் சிக்கலான ஸ்ட்ரச்சர் கொண்டவை, அவற்றில் டேக்ஸ் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைப் பற்றி எல்லாம் முதலீட்டாளருக்குத் தெரியாதிருந்தால் எதிர்பாராத அதிர்ச்சிகளை சந்திக்க நேரலாம்.

ETFகளில் டைவர்சிஃபிகேஷன் நன்மை இருந்தாலும், ஸ்டாக்குகள் மற்றும் பிற வகை மியூச்சுவல் ஃபண்ட்களைப் போலவே இவையும் மார்கெட் ரிஸ்க்குக்கு உட்பட்டவையே. ETF கண்காணிக்கும் இன்டெக்ஸ் பெரியதாக இருக்கும்போது, மார்கெட் ரிஸ்க் குறைவாக இருக்கும். ஆனால் முற்றிலும் இல்லாமல் போகும் என்று கூறுவதற்கில்லை. ETFகள் கண்காணிப்புப் பிழையை எதிர்கொள்ளலாம். அதாவது, அவற்றின் ரிட்டர்ன் அவற்றின் இன்டெக்ஸின் ரிட்டர்னில் இருந்து வேறுபடக்கூடும். ஏனெனில் இன்டெக்ஸ் எதிர்கொள்ளாத சில வகை செலவுகளை ETF எதிர்கொள்கிறது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்