ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன?

ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

ஸ்மால்-கேப் ஃபண்டுகள் என்பவை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களாகும், ஸ்மால்-கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான செக்யூரிட்டிகளில் அவற்றின் மொத்த அசெட்களில் குறைந்தபட்சம் 65% முதலீடு செய்யப்படுகின்றன. ரூ.100 கோடிக்குக் குறைவாகச் சந்தை மூலதனத்தை வைத்திருக்கும் நிறுவனங்கள் ஸ்மால்-கேப் நிறுவனங்கள் எனப்படும். சந்தை இடைத்தர நிறுவனங்கள் இடையே இந்த விளக்கம் வேறுபட்டாலும் சந்தை மூலதனத்தின்படி முக்கியமான 250 நிறுவனங்களுக்குப் பின் இருக்கும்.

ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் பண்புகள்

  • அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள ஸ்மால்-கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
  • அடிப்படை நிறுவனங்களின் ஆரம்பக்கட்ட வளர்ச்சி நிலை காரணமாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும், மேலும் ரிஸ்க்கும் அதிகம்.
  • மிட் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் சந்தை ஏற்றத்தில் (காளை சந்தை) இருக்கும்போது சிறப்பாகவும், சந்தை இறக்கத்தில் (கரடி சந்தை) இருக்கும்போது குறைவாகவும் செயல்படும்.
     

ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான காரணங்கள்?

  • குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்பு: சிறந்த வளர்ச்சி மற்றும் டைவர்சிஃபிகேஷன் வாய்ப்புகள் மூலம் வணிகங்களை முன்னேற்றுவதில் முதலீடுகள் இருக்கலாம்.
  • குறைந்த மதிப்புடைய அசெட்கள்: குறைந்த மதிப்பீடு காரணமாக, சிறிய வணிகங்களில் குறைவான செலவில் முதலீடு செய்வதால் அவை வளர்ச்சியடையும் போது நீண்டகால ரிட்டர்ன்களை வழங்கலாம்.
  • மெர்ஜர்கள் மற்றும் அக்கியூசிசன் (M&A) சிறிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க M&A வாய்ப்புகளை வழங்குகின்றன, பெரு நிறுவனங்களுடன் அவை இணைந்திருப்பதால் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
     

உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பலதரப்பட்டதாக மாற்றவும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பினாலும், நீண்டகால நிதி வாய்ப்புகளைத் தேட விரும்பினாலும், ஸ்மால்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான தேர்வாக இருக்கும். எனினும், முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் ரிஸ்க் புரொஃபைல், ஃபண்டின் முதலீட்டு உத்தி, இதற்கு முன்பான தரவு போன்றவற்றைக் கவனமாக மதிப்பீடு செய்யவும். அத்துடன் முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனைப் பெறவும்.

பொறுப்புதுறப்பு:
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?