டார்க்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் என்பவை எவை?

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் என்பவை யாவை? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உத்தரவாதமுள்ள சேமிப்புத் தயாரிப்புகளில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பது குறைவது போன்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றிய விழிப்புணர்வால், வங்கியின் ஃபிக்ஸட் டெப்பாசிட், PPF, NSC போன்ற பாரம்பரியமான முதலீட்டு வழிகளைத் தேர்வு செய்துகொண்டிருந்த, ரிஸ்க் எடுக்க விரும்பாத பல முதலீட்டாளர்கள், சில நல்ல காரணங்களுக்காக டெப்ட் ஃபண்ட்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். அத்தகைய முதலீட்டாளர்கள் டெப்ட் ஃபண்ட்கள் பிரபலமான ஈக்விட்டி ஃபண்ட்களைவிட குறைந்த ஏற்ற இறக்கத் தன்மை கொண்டிருப்பதாகவும், ஃபிக்ஸட் டெப்பாசிட், PPF, NSC போன்ற முதலீட்டு வழிகளைவிட வரிச் சேமிப்பில் அதிக லாபம் தருபவையாகவும், அதிக ரிட்டர்ன்ஸ் கொடுப்பவையாகவும் இருப்பதை உணர்கின்றனர். எனினும், இயல்பான ரிஸ்க் (அதாவது அசல் மற்றும் வட்டி பேமென்ட்களை இழக்கின்ற ரிஸ்க்), வட்டி விகித ரிஸ்க் (அதாவது வட்டி விகிதங்கள் மாறுவதால் விலை ஏற்றத் தாழ்வு ஏற்படும் ரிஸ்க்) ஆகிய ரிஸ்க்குகளால் பாதிக்கப்படுவது சாத்தியமே.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் (TMF) முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவை ஃபண்டின் முதிர்ச்சித் தேதிக்கு ஏற்ப சீரமைப்பதன் மூலம், டெப்ட் ஃபண்ட்களில் உள்ள ரிஸ்க்குகளை சிறப்பாகச் சமாளிக்க முதலீட்டாளர்களுக்கு உதவுகின்றன. இவை இவற்றின் அடிப்படையாக அமைந்துள்ள பாண்ட் இன்டெக்ஸைக் கண்காணிக்கின்ற பேசிவ் டெப்ட் ஃபண்ட்களாகும். இதனால், இத்தகைய ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் பாண்ட் இன்டெக்ஸை அடிப்படையாகக் கொண்ட பாண்டுகள் உள்ளன. இந்த பாண்டுகளின் மெச்சூரிட்டிகள் ஃபண்டின் குறிப்பிடப்பட்ட மெச்சூரிட்டிக்கு கிட்டத்தட்ட நெருங்கிய மதிப்பிலே இருக்கும். போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகள் முதிர்ச்சி அடையும் வரை வைக்கப்பட்டிருக்கும், இப்படி வைக்கப்பட்டிருக்கும் காலம் முழுவதும் கிடைத்த வட்டி பேமெண்ட்கள் அனைத்தும் மீண்டும் ஃபண்டில் முதலீடு செய்யப்படுகின்றன. இப்படியாக, டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ஃபண்ட்கள் FMPகளைப் போலவே தொடர்ந்து பெருகும் முறையில் இயங்குகின்றன. எனினும், FMPகளைப் போலன்றி, TMFகள் இயல்பில் ஓப்பன்-எண்டட் ஃபண்ட்களாகும், மேலும் அவை டார்கெட் மெச்சூரிட்டி டெப்ட் இன்டெக்ஸ் ஃபண்ட்களாகவோ டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ETFகளாகவோ வழங்கப்படும். ஆகவே, FMPகளைவிட TMFகள் அதிக லிக்விடிட்டியை (பணமாக்கும் தன்மை) கொண்டிருக்கின்றன.

TMF ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகள் அனைத்தும் முதிர்ச்சி வரை தக்கவைக்கப்படுவதாலும், ஃபண்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதிர்ச்சித் தேதியளவிலேயே அவை முதிர்ச்சியடைவதாலும், கால அளவைப் பொறுத்தவரை இவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளன. முதிர்ச்சி வரை பாண்டுகளைத் தக்கவைப்பதால், காலம் அதிகரிக்க அதிகரிக்க  ஃபண்டின் கால அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே செல்கிறது. இதனால் வட்டி விகித மாற்றங்களால் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் முதலிட்டாளர்களை பெரிய அளவில் பாதிக்காது.

தற்போது, TMFகள் அரசாங்க செக்யூரிட்டிகள், PSU பாண்டுகள், SDLகள் (ஸ்டேட் டெவலப்மென்ட் லோன்ஸ்) ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆகவே, பிற டெப்ட் ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது இவை குறைவான இயல்பு ரிஸ்க்கையே கொண்டுள்ளன. இந்த ஃபண்ட்கள் ஓப்பன் எண்டட் ஃபண்ட்களாக இருப்பதால், பாண்டு வழங்குபவர்களுடன் ஏதேனும் மோசமான சூழ்நிலை உருவாகும்பட்சத்தில், (உதாரணமாக டிஃபால்ட்டாவது அல்லது கிரெடிட் தரமிறங்குவது), தனது முதலீட்டை வெளியே எடுத்துக்கொள்ளத் தேர்வு செய்துகொள்ளலாம்.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் ஓப்பன் எண்டட் கட்டமைப்பு மற்றும் பணமாக்கப்படும் தன்மைக்கான உத்தரவாதம் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், முதிர்ச்சி வரை இவை வைக்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் அது ரிட்டர்ன் கிடைப்பதைக் கணிக்கக்கூடிய திறனை வழங்குகிறது. பாரம்பரிய டெப்பாசிட்களில் இருந்து டெப்ட் ஃபண்ட்களுக்கு முதலீட்டாளர்கள் மாற இது ஒரு முக்கியமான காரணியாகும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்