முறையற்ற டெபாசிட் திட்டங்கள் என்பவை எவை?

அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

அதிக ரிஸ்க் இல்லாமல் மார்க்கெட்டில் வழக்கமாகக் கிடைப்பதை விட அதிக ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் என்று உத்தரவாதமளிக்கின்ற முதலீட்டு ஸ்கீம்களில் சேருமாறு ஆசைகாட்டப்பட்டு புதிய, அப்பாவி முதலீட்டாளர்கள் பலர் இவற்றில் சேர்ந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதுபோன்ற அன்-ரெகுலேட்டட் முதலீட்டு ஸ்கீம்கள் போன்ஸி ஸ்கீம்கள் என்று அழைக்கப்படுகின்றன, இவை மிக அதிக ரிஸ்க் கொண்டவை. அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் என்பவை, இந்தியாவில் அனைத்து வகையான டெபாசிட் ஸ்கீம்களையும் மேற்பார்வையிடுகின்ற ஒன்பது ஒழுங்குமுறை அமைப்புகள் எவற்றிலும் பதிவு செய்யப்படாத, டெபாசிட் ஸ்கீம்களாகும், தனிநபர்களோ சிலர் சேர்ந்து குழுவாகவோ வணிகத் தேவைகளுக்காக நிறுவனங்களோ இவற்றில் முதலீடு செய்வர். இந்த ஸ்கீம்கள் வழக்கமாக, மிகக் குறைந்த ரிஸ்க் அல்லது முற்றிலும் ரிஸ்க்கே இல்லாமல் அதிக ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுப்பவையாக இருக்கும்.  

ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இது போன்ற அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்களில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். இதனால் 2019-இல் அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் தடைச் சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்தது. இந்தச் சட்டம் ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்களைப் பட்டியலிடுகிறது, அதோடு வழக்கமாக டெபாசிட் ஸ்கீம்களாகக் கருதப்படாத மியூச்சுவல் ஃபண்ட்கள், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்விசஸ் (PMS) போன்ற முதலீட்டு விருப்பத்தேர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.

மிகக் குறைந்த ரிஸ்க்கோடு அதிக ரிட்டர்ன்ஸ் கொடுக்கும் என்று நம்பவைக்கும் விதத்தில் ஏதேனும் முதலீட்டு விருப்பம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டால், எப்போதுமே ரிட்டர்ன் எவ்வளவு கிடைக்குமோ, ரிஸ்க்கும் அதே அளவு இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உலகில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது, அதிக ரிட்டர்ன் கிடைக்குமென்றால், அதோடு கூடவே அதிக ரிஸ்க்கும் இருக்கவே செய்யும். குறைந்த ரிட்டர்ன் கொண்ட முதலீட்டுடன் ஒப்பிடும்போது அதிக ரிட்டர்ன் கொடுக்கும் முதலீட்டில் அதிக ரிஸ்க் இருக்கும். அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் ரிஸ்க்குக்கும் ரிட்டர்னுக்கும் உள்ள இந்தத் தொடர்பைப் புரிந்துகொள்ளாத, சிறிய முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்திலேயே உள்ளன. ரிஸ்க்கைப் பற்றிப் பேசாமல், அதிக ரிட்டர்ன் கொடுக்கின்ற ஸ்கீம்களில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை ஆசையைத் தூண்டுவதன் மூலமே இந்த மோசடி ஸ்கீம்கள் செயல்படும். 

ரிட்டர்னுக்கு உத்தரவாதம் கிடையாது, ஆனால் இவற்றை விளம்பரப்படுத்துபவர்கள் இந்த ஸ்கீமில் கிடைக்கும் என்று உறுதியளித்த தொகையை சரியாக வழங்காமல் போகவே அதிக வாய்ப்புள்ளது. இதுவே அன்-ரெகுலேட்டட் முதலீடுகளில் உள்ள பெரிய ரிஸ்க்காகும்.
ஸ்கீமானது பட்டியலிடப்பட்ட ஒன்பது ஒழுங்குமுறை அமைப்புகள் எதிலும் பதிவுசெய்யப்படாதவை என்பதால், ஏமாற்றப்படும்பட்சத்தில் பணத்தை மீட்டுக்கொடுக்குமாறு கோரி இந்த ஒழுங்குமுறை அமைப்புகளிடம் சென்று நீங்கள் முறையிட முடியாது.

அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் சட்டம், 2019-இன் படி, இப்படியாக டெபாசிட் தொகைகளைப் பெற்றுக்கொண்டு, டெபாசிட் செய்தவர்களுக்கு உறுதியளித்தபடி பேமென்ட்களை வழங்காமல் தவறுவதும், இத்தகைய ஸ்கீம்களை விளம்பரப்படுத்துவதும் கூட சட்டவிரோதமாகும். இந்த வகையான குற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே, வழக்கமாகக் கிடைப்பதைவிட அதிக ரிட்டர்ன் கிடைக்கும், ஆனால் ரிஸ்க் எதுவும் கிடையாது, சிறிய கால அளவில் உங்கள் பணம் இரட்டிப்பாகும், பெரிதாக எதையும் முதலீடு செய்யாமலே பணக்காரர் ஆகலாம் என்றெல்லாம் ஆசைகாட்டும்படி ஏதேனும் முதலீட்டு ஸ்கீம்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஸ்கீம்களை யார் நடத்துகிறார்கள் என்று ஆய்வு செய்யுங்கள், நிறுவனம் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை அமைப்புகளில் எதிலாவது பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள், அந்த ஸ்கீம் பற்றி செய்திகளில் ஏதேனும் வந்துள்ளதா என்று இணையத்தில் தேடிப் பாருங்கள்.
 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்