வளர்ச்சி மற்றும் டிவிடென்ட் விருப்பங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சில முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இறங்குகின்றனர். அவர்கள் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே முதலீடு செய்யத் தொடங்கியிருப்பார்கள். சிலர் பணி ஓய்வுக் காலத்தை நெருங்கிக்கொண்டு இருப்பார்கள், அல்லது பணி ஓய்வுக் காலத்தின்போது பிற வருமானத்துடன் கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்குக் கிடைத்த பணிஓய்வு முதிர்வுத் தொகையை முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்த இரண்டு வெவ்வேறு விருப்பம் உள்ளவர்களுக்கென்று மியூச்சுவல் ஃபண்ட்களில் இரண்டு வழிகள் உள்ளன. 

குரோத் ஆப்ஷன் என்பது, ஃபண்டில் கிடைக்கும் இலாபங்களை மீண்டும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்து செல்வத்தை எதிர்காலத்திற்காகப் பெருக்கும், ஃபண்டின் மதிப்பையும் அதிகரிக்கும். செக்யூரிட்டிகளில் இருந்து கிடைக்கும் லாபங்கள் மீண்டும் ஸ்கீமில் முதலீடு செய்யப்படுவதால், கூட்டு வட்டியின் சக்தியின் காரணமாக குரோத் பிளானின் NAV அதிகம்.

டிவிடென்ட் பிளான் என்பது ஃபண்டில் கிடைக்கும் லாபங்களை அவ்வப்போது டிவிடென்ட் வருமானமாக டிஸ்ட்ரிபியூட் செய்யும். இது, ஃபண்ட் மேனேஜரின் முடிவுப்படி செய்யப்படும். டிவிடென்ட் பே-அவுட் என்பது உத்தரவாதமற்றது என்றாலும், உங்கள் வருமானத்திற்குக் கூடுதல் தொகையைச் சேர்க்க உதவும். டிவிடென்ட் பிளானில், முதலீட்டாளர் மீண்டும் மீண்டும் டிவிடென்டை முதலீடு செய்யும் வழியைத் தேர்வுசெய்தால், அதிக யூனிட்டுகளைப் பெற்றிருப்பார். அதுவே அவர் டிவிடென்ட் பே-அவுட் பெறத் தேர்வுசெய்திருந்தால் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

ஏப்ரல் 1,  2020 முதல், டிவிடென்ட் தொகைகள் முதலீட்டாளர்களின் தரப்பில் வரிவிதிக்கப்படும் வருமானமாக மாறியுள்ளது.. இப்போது, முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து பெறும் டிவிடென்ட் வருமானத்திற்கு, அவர்களுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். 

டிவிடென்ட் விருப்பத் தேர்வு என்றால், கூடுதல் வரிச் சுமையை நீங்கள் புறக்கணிக்க முடியாது. உங்கள் நிதிசார்ந்த இலக்குகள்/தேவைகளைப் பொறுத்தே இவை இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற முடிவு செய்ய வேண்டும். 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்