எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு (ETF) என்றால் என்ன

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ETF என்பது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் எனப்படுகிறது. இதனை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்று இல்லாமல் பங்குச் சந்தையில் விற்கப்படும் பொதுவான பங்குகள் போன்று டிரேட் செய்ய முடியும்.

ஓர் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையின் பதிவு செய்யப்பட்ட இடைத்தரகரின் மூலம் ETF -இன் யூனிட்களை வாங்கவும் விற்கவும் முடியும். இந்த ETF யூனிட்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். சந்தையின் ஏற்றஇறக்கங்களுக்கு ஏற்ப இதன் NAV மாறுபடும். ETF -இன் யூனிட்கள், பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும்.எனவே,சாதாரண ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்டை போன்று அவற்றை வாங்கவும் விற்கவும் முடியாது. ஒரு முதலீட்டாளர், எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சந்தையின் மூலம், தாங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான யூனிட்களை வாங்க முடியும்.

எளிமையான மொழியில் கூறவேண்டுமென்றால், ETF என்பவை CNX நிஃப்டி அல்லது BSE சென்செக்ஸ் போன்ற குறியீட்டு எண்களைப் பின்தொடரக்கூடிய ஃபண்ட்ஸ் ஆகும். நீங்கள் ஒரு ETF -இன் பங்குகள்/யூனிட்களை வாங்கும் போது, அவற்றின் ஆதாரக் குறியீட்டு எண்ணின் வருவாய் மற்றும் ரிட்டர்னை பின்தொடர்கின்ற ஒரு போர்ட்ஃபோலியோவை வாங்குவதாக அர்த்தம். ETF -க்கும், பிற இன்டெக்ஸ் ஃபண்ட்களுக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால், ETF அதன் தொடர்புடைய குறியீட்டு எண்ணைத் தாண்டிச் செயல்படாது. அதாவது, அதன் சம்பந்தப்பட்ட குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் செயல்திறன் இருக்கும். அவற்றின் மதிப்பு சந்தையைத் தாண்டிச் செல்லாமல், சந்தையின் போக்கை ஒட்டியே இருக்கும்.

ETF வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களை விட, அதிக தினசரி பணமாக்கலை வழங்கிடும் என்பதுடன் குறைந்த கட்டணத்தையும் கொண்டது. இதனால் தனிநபர் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு மாற்று முதலீட்டுத் திட்டமாக இது உள்ளது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்