ஃபேக்ட் ஷீட் என்றால் என்ன?

ஃபேக்ட் ஷீட் என்பது என்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஃபேக்ட்ஷீட் என்பது ஒரு ஸ்கீம் பற்றி முதலீட்டாளர் சட்டென அறிந்துகொள்ள உதவுகின்ற, நம்பகமான முதலீட்டாளர் வழிகாட்டியாகும். பள்ளி மாணவர்களின் மாதாந்தர ரிப்போர்ட் கார்ட் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அதில் படிப்பில் மாணவரின் செயல்திறன் பற்றி மட்டும் இருக்காது, அதோடு கூடுதல் திறன்களுக்கான செயல்பாடுகள், அட்டெண்டன்ஸ், ஒழுக்கம் என பல விதமான அம்சங்கள் பற்றியும் மதிப்பீடு இருக்கும். ரிப்போர்ட் கார்டில், வகுப்பின் சராசரி செயல்திறனுடன் ஒப்பீட்டில் மாணவரின் செயல்திறன் எப்படி உள்ளது என்பதும் காண்பிக்கப்படும். 

ஒரு ஃபண்டின் ஃபேக்ட்ஷீட்டும் அதைப் போன்றதே. ஃபண்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அது தெரிவிக்கும். முதலீட்டாளர் அல்லது முதலீடு செய்ய விரும்பும் ஒருவர் அறிந்துகொள்ள விரும்பக்கூடிய எல்லாவிதமான முக்கியத் தகவல்களையும் அது கொண்டிருக்கும். உதாரணமாக இன்வெஸ்ட்மென்ட் குறிக்கோள், பெஞ்ச்மார்க், AUM, ஃபண்ட் மேனேஜர்ஸ், ஆப்ஷன்ஸ் உள்ளதா என்பது போன்ற அம்சங்கள், குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை, வெளியேற்றக் கட்டணம் பொருந்துமா என்ற விவரம், பல்வேறு பிளான்களுக்கான NAV மதிப்புகள் போன்றவை. மேலும், பல்வேறு பிளான்களின் திட்ட விலக்கம் (ஸ்டாண்டர்ட் டீவியேஷன், அதாவது மாறுகின்ற தன்மையின் அளவீடு), பீட்டா, ஷார்ப்பே ரேஷியோ, எக்ஸ்பென்ஸ் ரேஷியோ, ஈக்விட்டி ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோ டர்ன்-ஓவர், டெப்ட் ஃபண்ட்களுக்கான கால அளவு, சராசரி முதிர்ச்சி மற்றும் போர்ட்ஃபோலியோ பலன் போன்ற முக்கியமான செயல்திறன் மற்றும் ரிஸ்க் அளவீடுகளும் ஃபேக்ட்ஷீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

முந்தைய மாதத்தில் பல்வேறு செக்டார்கள் மற்றும் செக்யூரிட்டிகளில் போர்ட்ஃபோலியோ ஹோல்டிங் பற்றிய தகவலையும் ஃபேக்ட்ஷீட் வழங்கும். ஃபண்டின் பெஞ்ச்மார்க்குடனான ஒப்பீட்டில் அதன் கடந்தகால செயல்திறனையும், அதன் ரிஸ்க் அளவையும் குறிப்பிட்டுக் காட்டும். சுருக்கமாக, ஒரு முதலீட்டாளர் என்ற முறயில் ஒரு ஃபண்ட் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல் அனைத்தையும் ஃபேக்ட்ஷீட் வழங்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்