கோல்டு ETF என்பது என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது?

கோல்டு ETF மற்றும் தங்கத்திற்கு zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

கோல்டு ETF என்பது உள்நாட்டில் இருக்கும் உண்மையான தங்கத்தின் விலையைக் கண்காணிக்கும் இலக்குடன் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்படும் ஃபண்ட். இது தங்கத்தின் நடப்பு விலைகளுக்கு ஏற்றபடி தூய தங்கக் கட்டிகளில் (கோல்டு பார்கள்) முதலீடு செய்கின்ற பேசிவ் இன்வெஸ்ட்மென்ட் இன்ஸ்ட்ருமென்ட் ஆகும். எளிதாகப் புரியும்படி சொல்வதானால், ETFகள் உண்மையான தங்கத்தையே குறிக்கின்றன (தாள் அல்லது டி-மெட்டீரியலைஸ் செய்யப்பட வடிவத்தில்) என்று சொல்லலாம். 

1 யூனிட் கோல்டு ETF = 1 கிராம் தங்கம்.

கோல்டு ETFகள் மற்ற நிறுவனங்களின் ஸ்டாக்குகளைப் போலவே இந்திய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. முதலீட்டாளர்கள் ஸ்டாக்குகளை வர்த்தகம் செய்வதைப் போலவே கோல்டு ETFகளையும் வர்த்தகம் செய்யலாம்.

கோல்டு ETFகள் முக்கியமாக NSE (நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) மற்றும் BSE (பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) எக்ஸ்சேஞ்ச்களில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. இவை ரொக்கப் பிரிவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன, இவற்றைத்இவற்றை தொடர்ச்சியாக மார்க்கெட் விலைகளில் வாங்கவும் விற்கவும் சாத்தியமுள்ளது. 

கோல்டு ETFகளை வாங்குவதற்கான நேரடி வழி உள்ளது. அதற்கு நீங்கள் ஒரு ஸ்டாக் புரோக்கர் மூலம் டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும். அதன் பிறகு, ஷேர்களை வாங்குவது போலவே நீங்கள் கோல்டு ETF யூனிட்டுகளை நேரடியாக வாங்கலாம். 

இந்தச் செயல்முறை விரிவாக இங்குக்இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஒரு ஸ்டாக் புரோக்கரைத் தொடர்புகொண்டு ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டீமேட் கணக்கைத் தொடங்குங்கள். 
  • உங்கள் வர்த்தக தளத்தில், தேவையான உள்நுழைவு விவரங்களைக் கொண்டு கணக்கில் உள்நுழையுங்கள். 
  • இப்போது நீங்கள் வாங்க விரும்பும் கோல்டு ETFகளைத் தேர்வுசெய்யுங்கள். 
  • நீங்கள் விரும்பும் அளவு கோல்டு ETFகளை வாங்கிய பிறகு, உறுதிப்படுத்தும் செய்தி வரும். 
  • கணக்கின் மூலம் கோல்டு ETFகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர் விரும்பாவிட்டால், மறைமுகமாக இந்த ETFகளில் முதலீடு செய்கின்ற கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்களிலும் அவர்கள் முதலீடு செய்யலாம். 
  • அதாவது, முதலீட்டாளர் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கிறார். அந்த ஃபண்ட்களில் அசெட்டுகளாக இருப்பது கோல்டு ETFகள். 

 

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

286
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்