KYC செயல்முறை என்றால் என்ன?

KYC செயல்முறை என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

KYC என்பதன் விரிவாக்கம் "நோ யுவர் கஸ்டமர் (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்)" என்பதாகும் மற்றும் இந்தச் சொற்றோடரானது எந்தவொரு நிதி அமைப்புடனும் கணக்கைத் தொடங்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளரை அடையாளம் காணும் செயல்முறைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பரிந்துரைக்கப்படும் புகைப்பட அடையாள அட்டை (உதாரணமாக, KYC அட்டை, ஆதார் அட்டை) மற்றும் முகவரிச் சான்று மற்றும் தனிநபர் சரிபார்ப்பு (KYC) போன்ற சம்பந்தப்பட்ட ஆதரவு ஆவணங்களின் மூலம் முதலீட்டாளரின் அடையாளம் மற்றும் முகவரியை KYC உறுதி செய்திடும். கருப்புப் பணத் தடுப்புச் சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி KYC இணக்கம் கட்டாயமானது. மேலும் இந்த விதி,கருப்புப் பணத் தடுப்பு (AML), SEBI யின் தரநிலைகள்/ பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (CFT)/ செக்யூரிட்டீஸ் சந்தை இடைத்தரகர்களின் கடப்பாடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோ யுவர் கஸ்டமர் (KYC) வழக்கமாக 2 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது:

பகுதி I ஆனது, அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிதி இடைத்தரகர்களின் மூலம் பயன்படுத்தப்படுவதற்கு மத்திய KYC பதிவேட்டின் (சீரான KYC) மூலம் பரிந்துரைக்கப்படும் முதலீட்டாளரின் அடிப்படையான மற்றும் சீரான KYC விவரங்களைக் உள்ளடக்குகிறது மற்றும்

பகுதி II ஆனது, மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் புரோக்கர், முதலீட்டாளரின் கணக்கைத் தொடங்கும் டெபாசிட்டரி பங்கேற்பாளர் போன்ற நிதி இடைத்தரகர்களால் தனித்தனியாகப் பெறப்பட்ட கூடுதல் KYC தகவலை உள்ளடக்குகிறது (கூடுதல் KYC).

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்