மணி மார்க்கெட் ஃபண்ட் என்பது என்ன?

மணி மார்க்கெட் ஃபண்ட் என்பது என்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சி அடைகின்ற மணி மார்க்கெட் இன்ஸ்ட்ருமென்ட்களில் பெரும்பாலும் முதலீடு செய்கின்ற ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட்தான் மணி மார்க்கெட் ஃபண்ட் ஆகும். மணி மார்க்கெட் என்றால் மிகவும் குறுகிய கால நிலையான வருமானம் பெற்றுத் தருகின்ற இன்ஸ்ட்ருமென்ட்களைக் கையாளும் நிதிச் சந்தை என்று அர்த்தம். மணி மார்க்கெட் ஃபண்ட்களில் பெரும்பாலும் பங்கு பெறுவது வங்கிகள், நிறுவன முதலீட்டாளர்கள், கார்ப்பரேஷன்கள், நிதி நிறுவனங்கள் போன்றவையே ஆகும். 

மணி மார்க்கெட் ஃபண்ட் குறிப்பாக, குறுகிய முதலீட்டுக் காலம், அதிக லிக்விடிட்டி, குறைவான வட்டி விகிதங்கள், ஒப்பீட்டில் குறைவான ரிட்டர்ன்கள் ஆகிய பண்புகளைக் கொண்டிருக்கும். 

மணி மார்க்கெட் ஃபண்ட்கள் ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால், ரிட்டர்ன்கள் சிறப்பாகக் கிடைக்கும் வகையில் கால அளவை அவை தேவைக்கேற்ப சரி செய்யும், அதே சமயம் ரிஸ்க்கையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 

அதற்கும் மேல், இந்த ஃபண்ட்களும் மற்ற மியூச்சுவல் ஃபண்ட்களைப் போலவே செயல்படுகின்றன ஆனால், முதலீட்டிற்கு வழங்கும் கால அளவை தேவைக்கேற்ப சரி செய்வதன் மூலம் ரிஸ்க்குகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே சமயம் அதிக ரிட்டர்ன்களையும் பெற்றுத் தர ஃபண்ட் மேனேஜர்களை அனுமதிக்கும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

மணி மார்க்கெட் ஃபண்டின் முக்கியமான பண்புகள் பின்வருமாறு:

இவை குறைவான முதிர்ச்சிக் காலத்தைக் கொண்டவை: மணி மார்க்கெட் ஃபண்ட்கள், ஃபண்டின் வகையைப் பொறுத்து ஒரு நாள் முதல் ஒரு வருடம் வரை குறைவான முதலீட்டுக் காலத்தைக் கொண்டுள்ளவை.

இவை குறைவான வட்டி விகிதங்கள் கொண்டவை: நிலையான வருமானம் பெற்றுத் தரும் செக்யூரிட்டிகளின் வட்டி விகித பாதிப்புத் தன்மையானது அவற்றின் முதிர்ச்சிக் காலத்தோடு நேரடியாகத் தொடர்புடையது. முதிர்ச்சிக் காலம் நீண்ட காலமாக இருக்கும்பட்சத்தில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும், அதே போல முதிர்ச்சிக் காலம் குறைவாக இருக்கும் போது வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.

இவை அதிக லிக்விடிட்டி கொண்டவை: இவை லிக்விட் மற்றும் பாதுகாப்பான டெப்ட் அடிப்படையிலான அசெட்டுகளில் முதலீடு செய்வதால், அதிக லிக்விடிட்டியை வழங்குகின்றன.

இவை குறைவான ரிட்டர்ன்களைக் கொண்டவை: முதிர்ச்சிகாலம் அதிகமாக அதிகமாக நிலையான வருமானம் பெற்றுத்தரும் செக்யூரிட்டிகளில் ரிட்டர்ன்களும் அதிகமாக இருக்கும். முதிர்ச்சிகாலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் நிலையான வருமானம் பெற்றுத்தரும் செக்யூரிட்டிகளில் ரிட்டர்ன்களும் குறைவாக இருக்கும். NCDகள் (நான்-கன்வர்ட்டிபல் டிபன்ச்சர்ஸ்), G-பாண்டுகள் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, மணி மார்க்கெட் ஃபண்ட்கள் குறைவான முதிர்ச்சிக் காலம் கொண்டவை, அதோடு நீண்ட கால செக்யூரிட்டிகளை விடக் குறைவான ரிட்டர்ன்களை அளிப்பவை.

மற்ற முதலீடுகளைப் போலவே மணி மார்க்கெட் ஃபண்ட்களிலும் சில சாதக பாதகங்கள் உள்ளன, இவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல், நீண்ட கால முதலீட்டிற்கு மணி மார்க்கெட் ஃபண்ட்கள் பொருத்தமானவை அல்ல, ஆனால் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இவை நல்ல முதலீட்டுத் தெரிவாக இருக்கும். 

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்