SWP கால்குலேட்டர் என்பது என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?
2 நிமிடம் 19 வினாடி வாசிப்பு

கருவிகளைப் பயன்படுத்தி நிதி குறித்துத் திட்டமிடும்போது, முடிவெடுத்தல் எளிமையாக இருக்கும். SWP கால்குலேட்டர் என்பது அப்படியான ஒரு கருவிதான். இது சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது, முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் இருந்து வித்ட்ராயலைத் திட்டமிட உதவுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் வசதிகளில் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) என்ற அம்சம் உள்ளது. இது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொடர்ச்சியான இடைவெளிகளில் முன்பே தீர்மானிக்கப்பட்ட தொகைகளை வித்ட்ரா செய்ய அனுமதிக்கிறது. ஒரு முதலீட்டை மொத்தமாக ரிடீம் செய்வதற்குப் பதிலாக, யூனிட் வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை மட்டும் வித்ட்ரா செய்ய SWP உதவுகிறது, இதனால் நிலையான பணப் புழக்கத்திற்கு வழியும் கிடைக்கிறது, மீதமிருக்கும் தொகையின் மூலம் ரிட்டர்ன்கள் கிடைத்து பணமும் பெருகுகிறது.
SWP மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் என்பது உங்கள் முதலீட்டின் கார்ப்பஸ் தொகை, எதிர்பார்க்கும் ரிட்டர்ன்கள், வித்ட்ரா செய்யும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் வித்ட்ரா செய்யக்கூடிய தொகை எவ்வளவு என்பதை மதிப்பிட உதவும் ஆன்லைன் கருவியாகும். ஒவ்வொரு முறை வித்ட்ரா செய்த பிறகும் உங்கள் முதலீட்டில் எவ்வளவு பணம் மீதம் இருக்கும் என்பதைப் பற்றிய தெளிவான பார்வையை இது வழங்குகிறது.
கால்குலேட்டரின் அடிப்படை அம்சங்கள்:
எளிமையான உள்ளீட்டு புலங்கள்: முதலீட்டுத் தொகை, வித்ட்ரா தொகை, இடைவெளி, எதிர்பார்க்கும் ரிட்டர்ன் விகிதம், கால அளவு ஆகிய எளிய விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
துல்லியமான கணிப்புகள்: வித்ட்ராயல் விகிதத்தைக் கொடுத்தால், இந்தக் கால்குலேட்டர் உங்கள் பணம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதைக் காட்டும், இருந்தாலும் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களையும், மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டர்ன்கள் மார்க்கெட் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படக்கூடியவை என்ற விஷயத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளக்கூடிய சூழல்கள்: வித்ட்ரா தொகை அல்லது ரிட்டர்ன் மாறினால், அது உங்கள் பணத்தை எப்படி பாதிக்கிறது என்று பார்க்க நீங்கள் அவற்றை மாற்றிப் பார்க்கவும் முடியும்.
நிதித் திட்டமிடல்: உங்கள் முதலீட்டை விரைவாக வித்ட்ரா செய்துவிடாமல், நீடித்து நிலைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வித்ட்ரா தொகையைத் திட்டமிட உதவுகிறது.
SWP கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கான பிரதானப் படிகள்:
- முதலீட்டுத் தொகையை உள்ளிடவும்: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ள மொத்தத் தொகையை உள்ளிடவும்.
- வித்ட்ரா தொகையைத் தேர்ந்தெடுக்கவும்: குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (மாதாந்திரம், காலாண்டுக்கு ஒருமுறை போன்று) எவ்வளவு வித்ட்ரா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்.
- வித்ட்ரா இடைவெளியைத் தேர்வுசெய்யவும்: வித்ட்ரா செய்வதற்கான கால இடைவெளியை (மாதாந்திரம், காலாண்டுக்கு ஒருமுறை, வருடாந்திரம்) முடிவு செய்யவும்.
- எதிர்பார்க்கும் ரிட்டர்ன்களை அமைக்கவும்: மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டர்ன்கள் மார்க்கெட்டைச் சார்ந்தவை என்பதை மனதில் கொண்டு மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன் விகிதத்தை வழங்கவும்.
- வித்ட்ரா செய்யும் கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்: எவ்வளவு காலத்திற்கு ஃபண்டுகளை வித்ட்ரா செய்யப் போகிறீர்கள் என்ற கால அளவை வரையறுக்கவும்.
- முடிவுகளைப் பார்க்கவும்: கால்குலேட்டர் இவற்றைக் காட்டும்:
ஒவ்வொரு வித்ட்ராயலுக்குப் பிறகும் மீதமிருக்கும் தொகை.
உங்கள் கார்ப்பஸ் தொகை எவ்வளவு நாட்கள் நீடிக்கும்.
நீண்ட கால அளவில் நீங்கள் வித்ட்ரா செய்திருக்கும் மொத்தத் தொகை.
SWP கால்குலேட்டர் என்பது நீண்ட கால நிதி இலக்குகளை சமரசம் செய்துகொள்ளாமல், சரியான முறையில் ஃபண்டுகளை வித்ட்ரா செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாகும். செயல்திறன் மிக்க விதத்தில் திட்டமிடுதல், மன நிம்மதி, பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தக் கருவி உறுதிசெய்கிறது. விவரமான முடிவுகளை எடுக்க, உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டு உத்தியின் ஒரு பகுதியாக எப்போதும் இந்தக் கருவியைப் பயன்படுத்துங்கள். இருந்தாலும், நீங்கள் முடிவெடுப்பதற்கு இந்தக் கருவி மட்டுமே ஒரே காரணியாக இருக்கக்கூடாது, மார்க்கெட்டில் முதலீடு செய்யும் முன்பு நீங்கள் ஆய்வு செய்ய வேண்டிய இன்னும் சில விஷயங்களும் உள்ளன என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
பொறுப்புதுறப்பு: பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.