சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்றால் என்ன?

சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்பது ஒட்டுமொத்த மார்க்கெட்டையோ, அதில் பெரும்பாலான பகுதியையோ பாதிக்கக்கூடிய ரிஸ்க் ஆகும். இதை மார்க்கெட் ரிஸ்க் என்று குறிப்பிடுவார்கள். இது பொருளாதாரம், சமூக-அரசியல், மார்க்கெட் தொடர்பான நிகழ்வுகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் பாதிக்கும் ரிஸ்க் ஆகும். இத்தகைய நிகழ்வுக்கான சாத்தியம் குறைவாக இருந்தாலும் இதைக் கருத்தில்கொள்வதும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்தக் காரணிகளுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகளையும் அவற்றால் விளையும் சிக்கல்களையும் இது உங்களுக்குத் தெரியப்படுத்தும்.


சிஸ்டமேட்டிக் ரிஸ்க் வகைகள்

1) மார்க்கெட் ரிஸ்க்
மார்க்கெட்டின் நிலையற்ற தன்மை, முதலீட்டாளரின் உணர்வு சார்ந்த நம்பிக்கை, சப்ளை/டிமாண்ட் டிரெண்ட்கள் போன்ற மார்க்கெட்டின் முதலீட்டுச் செயல்பாட்டிற்கான பொதுவான மார்க்கெட் நிலவரங்களில் ஏற்படும் சாத்தியமுள்ள பாதிப்பே மார்க்கெட் ரிஸ்க் என்று குறிப்பிடப்படும். இந்தப் பொதுவான மார்க்கெட் காரணிகள் வெவ்வேறு வகையான முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
2) வட்டிவிகித ரிஸ்க்
வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் முதலீட்டின் செயல்திறனில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே, வட்டி விகித ரிஸ்க் எனப்படும். உதாரணமாக, வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் ஃபிக்ஸட்-இன்கம் தயாரிப்புகளான பாண்டுகளின் மதிப்பு குறையும்.
3) பணவீக்க ரிஸ்க்
கணிசமான அளவு பணவீக்கம் அதிகரித்தால் வட்டி விகிதங்கள் உயர்வதுடன் ஈக்விட்டி மற்றும் பாண்டு மார்க்கெட்களில் விற்பனை மேற்கொள்ளப்படும்.
4)அரசியல் ரீதியான ரிஸ்க்
அரசியல் ரீதியான ரிஸ்க் என்பது, அரசின் கொள்கையில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, அரசியல் சூழல் வலுவற்று இருந்தாலோ ஏற்படும் ரிஸ்க் ஆகும்.
5)கரன்சி ரிஸ்க்
வேறு நாட்டில் முதலீடு செய்வதில் கரன்சி ரிஸ்க் இருக்கும். அந்நியச் செலாவணி மார்க்கெட்டில் இருக்கும் நிலையற்ற தன்மையைப் பொறுத்து உங்கள் முதலீடுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.


பொறுப்புதுறப்பு:
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்