மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளை செய்யத் தொடங்குவதற்கான எளிமையான வழிகள் என்னென்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

வங்கிக் கணக்கைத் தொடங்கும்போது அதிக ஆவண வேலைகள் இருக்கும் அதன் பிறகு எல்லாச் சேவைகளையும் எளிதாகப் பெற முடியுமல்லவா, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதிலும் அதுபோலத் தான். மியூச்சுவல் ஃபண்ட் பயணத்தைத் தொடங்குவதற்கான அடிப்படைத் தேவை, உங்கள் KYC சரிபார்ப்பை நிறைவு செய்யத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து அதை நிறைவு செய்வது தான். KYC முடிந்ததும், எப்போது வேண்டுமானாலும் எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் எவ்வளவு தொகையையும் முதலீடு செய்ய முடியும். 

KYC என்பது ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டியது. அது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உலகத்திற்குத் திறவுகோல் போன்றது! மியூச்சுவல் ஃபண்ட் பயணத்தை இனிதே சுமூகமாகத் தொடங்க அது உதவுகிறது, KYC சரிபார்ப்பு நிறைவடைந்துவிட்டால் அதன்பிறகு வீட்டிலிருந்தே சௌகரியமாக எல்லாவற்றையும் செய்யலாம். இப்போதெல்லாம், KYC சரிபார்ப்பையும் நீங்கள் ஆன்லைனிலேயே நிறைவு செய்ய முடியும். ஆனால் e-KYC செய்தால், ஆண்டுக்கு ஒரு ஃபண்ட் ஹவுஸில் நீங்கள் ரூ. 50,000 வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். 

KYC சரிபார்ப்பை நிறைவுசெய்த பிறகு, டிஸ்ட்ரிபியூட்டர் உதவியுடனோ நீங்களாகவோ எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டில் ரிடம்ப்ஷன் கோரிக்கையைச் சமர்ப்பித்து எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணத்தை வித்ட்ரா செய்துகொள்ளவும் முடியும். உங்கள் வங்கிக் கணக்கிலேயே 3-4 வேலை நாட்களுக்குள் பணம் கிரெடிட் ஆகிவிடும். இப்போதெல்லாம், SIP அல்லது லம்ப்சம் மூலமாக முதலீடு செய்வது, ஒரு ஸ்கீமிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது போன்ற பல பரிவர்த்தனைகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதி வந்துவிட்டது.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்