ETF-இல் யார் முதலீடு செய்ய வேண்டும்?

யார் ETF-இல் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஸ்டாக் மார்கெட் அனுபவம் பெற வேண்டும் விரும்புபவர்களுக்கு குறைந்த செலவில் அந்த வாய்ப்பை அளிக்க ETFகள் ஏற்றவை. இவை எக்ஸ்சேஞ்ஜில் பட்டியலிடப்படுகின்றன, மேலும் ஸ்டாக்ஸ் போன்றே வர்த்தகம் செய்யப்படுகின்றன என்பதால், இவற்றைப் பணமாக்குவதும் எளிது செட்டில்மென்ட்டும் உடனடியாக நிறைவடையும். ETFகளிலும் ஸ்டாக் இன்டெக்ஸ் போன்றே ஒன்று உள்ளது, நீங்களே தேர்ந்தெடுத்து சில ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, இந்த இன்டெக்ஸ் உங்களுக்கு டைவர்சிஃபிகேஷன் வசதியைத் தருகிறது.

ETFகளை ஷார்ட் சேல் செய்ய முடியும், மார்ஜினில் வாங்க முடியும் என்ற விதத்தில் இவை மிகுந்த நெகிழ்த்தன்மை உள்ளவை. கமாடிட்டிஸ், வெளிநாட்டு இன்டெக்ஸ், சர்வதேச செக்யூரிட்டிகள் போன்ற பல்வேறு மாற்று முதலீட்டு வழிகளை அணுகவும் ETFகள் உதவுகின்றன. உங்கள் நிலையை ஹெட்ஜிங் (இழப்புக் காப்பு) செய்வதற்கு ஆப்ஷன்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ் போன்ற வசதிகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும். இந்த வசதி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கிடையாது.

ஆனாலும், ETFகள் எல்லா முதலீட்டாளர்களுக்கும் ஏற்றவை என்று கூற முடியாது. குறிப்பிட்ட ஸ்டாக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமின்றி, நீண்ட காலத்திற்கு ஈக்விட்டி முதலீட்டைச் செய்து பலனடைய விரும்பும் புதிய முதலீட்டாளர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ் சிறந்த வழியாகும். 

சரியான ETF-ஐத் தேர்ந்தெடுக்க, வழக்கமான ரீட்டெயில் முதலீட்டாளர்களுக்கு உள்ளதை விட ஃபினான்ஷியல் மார்கெட் பற்றிய புரிதல் அதிகமாக இருக்க வேண்டும். ஆகவே, உங்கள் ETF முதலீடுகளை நிர்வகிக்க, சிறிது ஹேண்ட்ஸ்-ஆன் இன்வெஸ்ட்மென்ட் ஸ்டைல் தேவைப்படும். 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்