சேமிப்பதைவிட முதலீடு செய்வது ஏன் சிறந்தது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு 50 ஓவர் கிரிக்கெட் மேட்சில் 5வது ஓவரிலேயே 6வது பேட்ஸ்மேன் பேட் செய்ய வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். விக்கெட்டை இழந்துவிடுவது மட்டுமல்லாது, ரன்களை எடுப்பதிலும் முதலில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.

முதலீடு செய்வதற்கு சேமிப்பு முக்கியமானது என்றாலும், ரன்களை எடுப்பதற்கு விக்கெட்களும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரிய ஷாட்களை தவிர்த்து பாதுகாப்பாக ஆட்டத்தை ஆடுவதன் மூலம் அந்த பேட்ஸ்மேன் விக்கெட்களை பாதுகாக்க முடியும். ஆனால், இதனால் அதிகம் ஸ்கோர் செய்ய முடியாமல் போகலாம். தூக்கி அடிப்பது அல்லது ஃபீல்டர்களுக்கு இடையேயான டிரைவ்கள் அல்லது கட்கள் மற்றும் நட்ஜ்கள் போன்ற ஷாட்களை அடித்து அந்த பேட்ஸ்மேன் சில பவுண்டரிகளையும் அடிக்க வேண்டியிருக்கும்.

அதேபோன்று, ஒருவர், தனது பெரும் தொகைநிதி இலக்கை எட்டுவதற்கு,பணவீக்கத்தை எதிர்கொண்டு, குறிப்பிட்ட முதலீட்டு அபாயங்களை சந்திக்க வேண்டும். முதலீடு என்பது அபாயங்களைக் கணக்கிட்டு, அவற்றை திறமையாக கையாள வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த அபாயங்களையும் தவிர்ப்பது என்று அர்த்தமில்லை.

அதேசமயம், இந்த கிரிக்கெட் ஒப்புமையை வைத்துப் பார்க்கும் போது, ரன்களும் எடுத்து, அவுட் ஆகாமலும் இருக்க வேண்டும் என்றால், ஒருவர் சில கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுக்க வேண்டும். கடுமையான ஷாட்களை அடிக்கக் கூடாது. அதே சமயம், தேவையற்ற அபாயங்களை எதிர்கொள்வது என்பது மோசமானதோர் உத்தியாகும்.

எனவே, சேமிப்பு அவசியமானது. அதேசமயத்தில், நீண்டகால இலக்குகளை அடைவதற்கு முதலீடு செய்வதும் முக்கியமானது.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்