மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து எனது முதலீட்டை வித்டிரா செய்வது கடினமானதா?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பிறகு பணத்தை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்று கவலையா?  உண்மை என்னவெனில், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் பணத்தை வித்ட்ரா செய்துகொள்ள முடியும். அந்த சுதந்திரம் எப்போதும் உண்டு! மிகச் சிக்கலான ரிடம்ப்ஷன் செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும் என்பதால், பல முதலீட்டாளர்கள் தங்கள் பணம் சிக்கிக்கொள்ளும் என்று நினைக்கின்றனர். மியூச்சுவல் ஃபண்டிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்வதென்பது, வங்கியிலிருந்து பணத்தை எடுப்பது போன்றே மிக எளிது தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்: உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் லாகின் செய்து "ரீடீம்" எனும் பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். 

ரிடம்ப்ஷன் கோரிக்கையை உங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் சமர்ப்பிக்கலாம். பதிவுசெய்த உங்கள் வங்கிக் கணக்கில் பணம் 3-4 வேலை நாட்களுக்குள் கிரெடிட் ஆகிவிடும். இந்த நாட்களின் எண்ணிக்கையானது நீங்கள் முதலீடு செய்துள்ள ஸ்கீமின் வகையைப் பொறுத்து அமையும். நீங்கள் ஆன்லைனில் ரிடம்ப்ஷன் கோரிக்கை செய்துள்ளீர்களா அலுவலகத்திற்குச் சென்று நேரில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளீர்களா என்பதைப் பொறுத்ததல்ல. ஓவர்நைட் ஃபண்ட்ஸாகவோ லிக்விட் ஃபண்ட்ஸாகவோ இருந்தால் ரிடம்ப்ஷன் கோரிக்கையைச் சமர்ப்பித்த அதே நாளில் கூட நீங்கள் பணத்தைப் பெற முடியும். ஏனெனில் சில AMCகள் INR 50,000 க்கு மேல் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஒரே நாளில் ரிடம்ப்ஷன் செயல்முறையை நிறைவு செய்யும் வசதியையும் வழங்குகின்றன. இந்த ஃபண்ட்கள் உபரி பணத்தை சில நாட்களுக்கோ சில வாரங்களுக்கோ முதலீடு செய்து வைப்பதற்காகவே உள்ளவை என்பதால், உடனடி ரிடம்ப்ஷன் வசதி மிகப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முதலீட்டிலிருந்து ஓரளவு லாபம் கிடைக்கும் அதே சமயம் தேவைப்படும் சமயத்தில் பணமும் விரைவாகக் கைக்குக் கிடைத்துவிடும். எனினும், ரிடம்ப்ஷன் செய்யும்போது விதிக்கப்படும் எக்ஸிட் லோடு கட்டணங்கள் குறித்துக் கருத்தில் கொள்ள வேண்டும். 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்