ஒரு நிறுவனத்தின் ஃபண்டில் இருந்து மற்றொரு நிறுவன ஃபண்டிற்கு எப்படி மாற்றுவது?

ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு நிறுவனத்தின் ஃபண்டிற்கு எப்படி மாறுவது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சிறந்த நிதித் திட்டமிடலுக்காக , ஓர் ஓப்பன் எண்டட் திட்டத்திலிருந்து, அதே ஃபண்ட் ஹவுஸின் வேறொரு திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை ஸ்விட்ச் செய்வதுண்டு. ஒரே ஃபண்ட் ஹவுஸுக்குள் ஸ்விட்ச் செய்வதற்கு, மூலத் திட்டத்தில் இருந்து ஸ்விட்ச் செய்யப்பட வேண்டிய தொகை/யூனிட்களின் எண்ணிக்கையையும், அவற்றை ஸ்விட்ச் செய்யவேண்டிய திட்டத்தின் பெயரையும் ஸ்விட்ச் செய்வதற்கான படிவத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். திட்டங்களில் இருந்து ஸ்விட்ச்-இன் மற்றும் ஸ்விட்ச்-அவுட் செய்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை உள்ளது. ஆனால், ஸ்விட்ச் செய்யும் போது வெளியேற்றக் கட்டணங்கள் மற்றும் மூலதன இலாப வரி போன்றவை விதிக்கப்படலாம். ஒரே ஃபண்ட் ஹவுஸுக்குள் ஸ்விட்ச் செய்யும் போது, பணமானது அந்த ஃபண்ட் ஹவுஸை விட்டு வெளியே செல்லாது என்பதால் செட்டில்மென்ட் காலகட்டம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

A என்ற மியூச்சுவல் ஃபண்ட்டிலுள்ள ஒரு திட்டத்தில் இருந்து , B என்ற மியூச்சுவல் ஃபண்டிலுள்ள ஒரு திட்டத்திற்கு ஸ்விட்ச் செய்யும் போது, அது ஒரு ஃபண்டிலுள்ள உங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு, மற்றொன்றில் முதலீடு செய்வதைப் போன்றது. முதல் மியூச்சுவல் ஃபண்டில் இருந்து பணமாக்குதலுக்காக விண்ணப்பித்து விட்டு, உங்கள் வங்கிக் கணக்கில் அதற்கான தொகை வரும் வரை காத்திருங்கள். உங்கள் முதலீடுகளைப் பணமாக்கும் போது, வெளியேற்றக் கட்டணங்கள் மற்றும் வரிகள் விதிக்கப்படலாம். முதல் ஃபண்டில் இருந்து பெறப்பட வேண்டிய தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்பு, பெறப்பட்ட வருமானத்தை எங்கு மறுமுதலீடு செய்ய வேண்டும் என்று மியூச்சுவல் ஃபண்டின் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடுங்கள். ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு சரியான ஃபண்டை தேர்ந்தெடுத்து மாறுவதற்கு நீங்கள் நிதி நிபுணர்களின் உதவியையும் நாடலாம்.

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்