ஒரு மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

ஒரு மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? zoom-icon
கால்குலேட்டர்கள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு டிராவல் ஏஜெண்ட்டிடம், “நான் எந்த வாகனத்தில் போவது என்பதை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேட்டுப் பாருங்கள். அவர் அளிக்கக்கூடிய முதல் பதில், “அது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பொறுத்தது.” நான் 5 கிமீ தொலைவு பயணிக்க வேண்டுமென்றால், ஒரு ஆட்டோவில் செல்வது என்பது சிறந்த தேர்வாக இருக்கும். அதேசமயம், புது தில்லியில் இருந்து கொச்சி செல்ல வேண்டுமென்றால், விமானத்தில் செல்வது சிறந்த தேர்வாக இருக்கும். குறுகிய தொலைவுக்கு விமானம் கிடைக்கப்பெறாது மற்றும் நீண்டதொலைவுக்கு ஆட்டோவில் செல்வது அதிக நேரம் எடுக்கும் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸிலும், ஆரம்பக் கேள்வியே - உங்கள் தேவைகள் என்னென்ன?

அது உங்களின் நிதி இலக்குகள் மற்றும் அபாய ஏற்புமையில் இருந்து தொடங்குகிறது.

முதலில் நீங்கள் உங்கள் நிதி இலக்குகளை அடையாளம் காணவேண்டும். சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறுகிய காலத் தேவைகள் மற்றும் இலக்குகளுக்குப் பொருத்தமாக இருக்கும். அதேசமயம் சில நீண்டகால இலக்குகளுக்குப் பொருத்தமானவையாக இருக்கும்.

அடுத்து, உங்களின் அபாய ஏற்புமை. வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அபாய ஏற்புமை இருக்கலாம். கணவன், மனைவி இருவரும் கூட்டாக நிதியை நிர்வகித்தாலும், அவர்களின் அபாய ஏற்புமை மாறுபடலாம். சிலர் அதிக அபாயம் கொண்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வர், சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டர்.

உங்கள் அபாய ஏற்புமையை மதிப்பிடுவதற்கு, நிதித் திட்டமிடல் நிபுணர்கள் அல்லது முதலீட்டு ஆலோசகர்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தர்களின் உதவியைப் பெறலாம்.

350
343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்