ஈக்விட்டி ஃபண்டுகள் என்றால் என்ன?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஈக்விட்டி ஃபண்ட்கள் என்பவை, முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவை குரோத் ஃபண்ட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

ஈக்விட்டி ஃபண்ட்கள், ஆக்டிவ்வாகவோ அல்லது பேஸிவாகவோ இருக்கலாம்; அதாவது ஆக்டிவ் ஃபண்டில், சந்தையை ஒரு ஃபண்ட் மேனேஜர் கண்காணித்து, நிறுவனங்களின் செயல்திறனை ஆராய்ந்து, முதலீடு செய்வதற்கான சிறந்த பங்குகளைப் பார்த்திடுவார். பேஸிவ் ஃபண்டில், சென்செக்ஸ் அல்லது நிஃப்டி ஃபிப்டி போன்ற பிரபலமான சந்தைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்கின்ற ஒரு போர்ட்ஃபோலியோவை ஃபண்ட் மேனேஜர் கட்டமைத்திடுவார்.

மேலும், பங்குகளின் சந்தை மதிப்பு (Market Capitalisation) படியும் ஈக்விட்டி ஃபண்ட்கள் பிரிக்கப்படலாம். அதாவது, ஒரு நிறுவனத்தின் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பைப் பொறுத்தது. லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் மற்றும் மைக்ரோ கேப் ஃபண்ட்கள் என்று உள்ளன.

அதுமட்டுமல்லாது, கூடுதலாக டைவர்ஸிஃபைடு அல்லது செக்டோரல்/ தீமேட்டிக் ஃபண்ட்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. கேப் ஃபண்ட்களில் ஒரு திட்டம், சந்தையிலுள்ள ஒட்டுமொத்த பங்குகளில் முதலீடு செய்யும். அதேசமயம், இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட வகைப்பாட்டில், ஒரு திட்டம், குறிப்பிட்ட துறை அல்லது தீமில் முதலீடு செய்யும், அதாவது தகவல் தொழில்நுட்பம் அல்லது உள்கட்டமைப்பு துறைகள்.

இவ்வாறு, ஈக்விட்டி பண்ட் என்பவை, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும். இவை, சாமான்ய முதலீட்டாளர்களுக்கு, நிபுணத்துவ நிர்வாகம் மற்றும் பன்முகத்தன்மையின் நன்மையை வழங்குகின்றன.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்