லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு ஏன் செய்ய வேண்டும்?

நீங்கள் ஏன் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

இந்தியாவில் சிறந்த 100 நிறுவனங்களின் சந்தை மூலதனத்தைப் பொறுத்து லார்ஜ் கேப் ஃபண்டு முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்தால், ஓரளவுக்குப் பெரிய சந்தை மூலதனத்தை வைத்துள்ள பிரபலமான நிறுவனங்களில் உங்கள் பணத்தை ஃபண்டு மேனேஜர்கள் ஒதுக்குவார்கள். லார்ஜ் கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான பிரிவுகளில் 80% முதலீடுகள் செய்வதன் மூலம், சந்தையில் முன்னணி மற்றும் வலிமையான நிதி நிலைமைகள் கொண்ட நிலையான நிறுவனங்களின் ஒரு பகுதியை முதலீட்டாளர்கள் மறைமுகமாகச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். லார்ஜ் கேப் நிறுவனங்களின் நிலைத்தன்மை மற்றும் வலிமையின் அடிப்படையில் லார்ஜ் கேப் ஃபண்டு வளர்ச்சியடைகிறது. பொருளாதார இறக்கங்களில் தாக்குப்பிடிக்கவும் இந்த நிறுவனங்களில் வசதிகள் உள்ளன. சிறந்த வணிக மாடல்கள், நிலையான நிதி அடிப்படைகள் அவர்களிடம் உள்ளன, அத்துடன் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு நீண்டகாலத்திற்கு லாபத்தை உருவாக்குகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


லார்ஜ் கேப் ஃபண்டுகள் மூலம், அடிப்படையில் வலிமையான நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்குச் சிறந்த தருணத்தைப் பற்றி முதலீடு செய்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. திறமையான ஃபண்டு மேனேஜர்கள் எங்கே முதலீடு செய்யலாம் என்பதைப் பார்த்துக்கொள்கிறார்கள், இதனால் உங்கள் நேரம் மற்றும் பளு குறைகிறது. அதனால், லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது இரண்டு விதங்களில் சிறந்ததாக இருக்கும்: குறைவான முதலீட்டுத் தொகை மற்றும் சிறந்த நிர்வாகம். ஒட்டுமொத்தமாக, லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு குழந்தையின் கல்வி அல்லது ஓய்வுக்குத் திட்டமிடல் போன்ற நீண்டகால இலக்குகளுக்காக ஒப்பீட்டளவில் நிலையான முதலீட்டு வளர்ச்சியை வழங்கலாம்.
 
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

284
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்