மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் உங்கள் ஓய்வுக்காலத்தை எப்படித் திட்டமிடலாம்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பெரும்பாலானோர், பணி ஒய்வு வயது நெருங்கும் வரை அதைப் பற்றி நினைப்பதில்லை. பணி புரியும் காலம் முழுதும் வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது, குடும்பத்தைப் பார்ப்பது, குழந்தைகளின் கல்வி, திருமணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக பல விஷயங்களைக் கவனிக்கவே சரியாய்ப் போய்விடுகிறது. இந்தப் பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றி முடித்த பின்பே நாம் பணி ஒய்வுக்குப் பிறகு நமக்கு என்ன எஞ்சியுள்ளது என்பது பற்றி யோசிக்கிறோம், அப்போது தான் பணி ஓய்வுக் காலம் தொடங்கும் முன்பு, குறைந்த காலகட்டத்தில் அதிக இலாபம் தரும் வகையில் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.. 15-30 வருடங்களுக்கு மேல் உங்களுக்கு சௌகரியமும் பாதுகாப்பும் ஆரோக்கியமும் வாழ்க்கை நடத்துவதற்கான போதுமான நிதி வளமும் தேவைப்படுகின்ற காலகட்டம் தான் உங்கள் பணி ஓய்வுக் காலம். அதற்காகத் திட்டமிட இது மிகவும் தவறான வழிமுறை.

பணி ஓய்வுக்காகத் திட்டமிடுவதை கூடுமான வரை முன்கூட்டியே தொடங்க வேண்டும். உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கை முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உங்கள் அன்றாட குடும்பச் செலவுகளும், கார் EMI, வீட்டுக் கடன் EMI, குழந்தைகளுக்கான முதலீடு, அவசர சூழலுக்கான சேமிப்பு என அனைத்தும் முடிந்த பிறகும் உங்களிடம் சிறிதளவேனும் பணம் மீதம் இருக்கும். அந்தப் பணத்தை உங்கள் பணி ஓய்வுக்காக சேமிக்கத் தொடங்குவதே நல்லது. அது சொற்ப அளவே என்றாலும், சரியான விதத்தில் முதலீடு செய்தால் நீண்ட கால அளவில் அது உங்களுக்கு நிறைந்த செல்வமாக வளர்ந்து பயனளிக்கும். அதற்கு மிகச் சிறந்த வழி மியூச்சுவல் ஃபண்ட் தான்! SIP திட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 500 கூட முதலீடு செய்யலாம். உங்கள் வருமானமோ சேமிப்போ அதிகரிக்கும்போது இந்தத் தொகையை அதிகரித்துக்கொள்ளலாம். கூட்டு வட்டி வேலை செய்யும் விதம் கண்டு நீங்களே மலைத்துப் போவீர்கள். நீங்களும் உங்கள் சுற்றமும் செல்வச் செழிப்பில் வாழக் காண்பீர்கள்!

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்