மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்படி ரிட்டர்ன் பெறுவேன்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பிற சொத்து வகைகளைப் போன்று, குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் முதலீட்டின் பெருக்கத்தைக் கணக்கிட்டு, அதனை தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிட்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ரிட்டர்ன்கள் கணக்கிடப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்டின் நிகர சொத்து மதிப்பு என்பது அதன் விலையைக் குறிக்கிறது மற்றும் இது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து ரிட்டர்ன்களை கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான ரிட்டர்ன் என்பது, விற்பனை தேதியின் NAV -ஐ, வாங்கிய தேதியின் NAV -யில் இருந்து கழித்து, அதன்பின்னர் அதனை சதவீதமாக மாற்றக் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்கி கணக்கிடப்படுகிறது. மொத்த ரிட்டர்ன்களை கணக்கிடும் போது, முதலீட்டைத் தக்க வைக்கும் காலகட்டத்தின் போது பெறப்படும் எந்தவொரு நிகர டிவிடென்ட்* அல்லது பிற வருமான விநியோகமும் மூலதனப் பெருக்கத்துடன் சேர்க்கப்படும்.

குறிப்பிட்ட காலகட்டத்திலான NAV -யின் அதிகரிப்பின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலதனப் பெருக்கம் பிரதிபலிக்கப்படும். இது ஏனென்றால், ஃபண்டின் NAV -யானது அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்கு விலைகளில் இருந்து பெறப்படுகிறது மற்றும் இந்த விலைகள் தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். குறிப்பிட்ட காலகட்டத்தில் ஃபண்டின் NAV -யில் ஏற்படும் மாற்றம், மூலதனப் பெருக்கத்துக்கோ அல்லது உங்கள் முதலீட்டில் ஏற்படும் இழப்புக்கோ பங்களிக்கலாம். ஃபண்ட் ஹவுஸின் மூலம் உங்களுக்கு வழங்கப்படும் கணக்கு அறிக்கையில், உங்கள் முதலீடுகளின் ரிட்டர்ன் செயல்திறனைப் பார்த்திடுங்கள். இந்த அறிக்கையில் உங்கள் பரிவர்த்தனைகள் மற்றும் உங்கள் முதலீடுகளின் மீதான ரிட்டர்ன் இரண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குறிப்பு: *வழங்கப்படும் டிவிடென்ட் மற்றும் சட்டபூர்வ வரிகள் ஏதேனும் இருந்தால் அந்த மதிப்பின் அளவுக்கு ஒரு ஃபண்டின் NAV குறையும்.
 

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்