ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் மூலம் பல்வேறு அசெட் பிரிவுகளில் முதலீடு செய்ய முடியுமா?

ஒரு மியூச்சுவல் ஃபண்டை பயன்படுத்தி, பல்வேறு சொத்து வகைகளில் ஒருவர் முதலீடு செய்ய முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரே ஒரு சொத்து வகை வகைப்பாட்டில் முதலீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் அல்லது பேட்ஸ்மென் போன்றது. அதேசமயத்தில், ஹைபிரிட் ஃபண்ட்கள் எனப்படும் பிற திட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட சொத்து வகைப்பாடுகளில் முதலீடு செய்திடும். உதாரணத்திற்கு, ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது இரண்டிலும் முதலீடு செய்திடும். ஈக்விட்டி மற்றும் டெப்டை தவிர, சில ஃபண்டுகள் தங்கத்திலும் முதலீடு செய்யலாம்.

கிரிக்கெட்டில் நாம், பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலிங் ஆல் ரவுண்டர்களை, அவர்கள் சிறந்து விளங்கும் திறன் கொண்டே பார்க்கிறோம். அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட சொத்து வகைப்பாட்டில் அதிகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.

பழமையான வகைப்பாடான பேலன்ஸ்டு ஃபண்ட் வகைப்பாடு, ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்திடும். ஈக்விட்டியிலான ஒதுக்கீடு வழக்கமாக அதிகமாக இருக்கும் (65% க்கும் மேல்) மற்றும் மீதமுள்ளவை டெப்ட்டில் முதலீடு செய்யப்படும்.

MIP அல்லது மாதாந்திர வருவாய்த் திட்டம் என்ற பிரபலமான ஒரு வகைப்பாடு உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர (அல்லது வழக்கமான) வருமானத்தைப் பெற்றுத் தரும். எனினும், வழக்கமான வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. இந்தத் திட்டங்கள், பெருமளவில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதனால், வழக்கமான வருமானத்தை உருவாக்க முடியும். காலப்போக்கில், ரிட்டர்ன்களை அதிகரிப்பதற்காக ஒரு சிறு பகுதி ஈக்விட்டியில் முதலீடு செய்யப்படும். 

ஹைபிரிட் திட்டத்தின் மற்றொரு வகை, ஈக்விட்டி, டெப்ட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யும். இதனால் மூன்று மாறுபட்ட சொத்து வகைகளின் ஆதாயத்தை ஒரே போர்ட்ஃபோலியோவில் பெறமுடியும்.

ஹைபிரிட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கு வெவ்வேறு ஈக்விட்டி அல்லது டெப்ட் அல்லது கோல்ட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான தேர்வும் ஒரு முதலீட்டாளருக்கு உள்ளது அல்லது மாறாக அவர் ஒரு ஹைபிரிட் ஃபண்டை வாங்கலாம்.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்