பல்வேறு ஈக்விட்டி ஃபண்டுகள் இருக்கின்றனவா?

ஈக்விட்டி ஃபண்ட்களின் பல்வேறு வகைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீட்டாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வெவ்வேறு ஈக்விட்டி ஃபண்ட்கள் உள்ளன. இந்த அனைத்து முதலீடுகளின் பரந்த நோக்கம், நீண்டகாலத்தில் முதலீட்டைப் பெருக்குவது.

இதனைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கு, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளுக்கு நாம் அனுப்பிய குழுக்களைப் பார்க்கலாம். ஒரு பெரிய விளையாட்டுக் குழு இருக்கும், அதில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் குழுவினர்கள் இருப்பர். ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று “டிராக் அண்ட் ஃபீல்ட்” நிகழ்வு. இந்த நிகழ்வுகளுக்காகவும் நாம் ஒரு குழுவை அனுப்புவோம். அதில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதல் மாரத்தான் உள்ளிட்ட நீண்டதூர ஓட்டப்பந்தயம் வரை இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவுமே ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட அனுப்பப்பட்டிருந்தாலும், வெவ்வேறு திறன்கள் கொண்ட வெவ்வேறு வீரர்கள் அந்தக் குழுவில் இருப்பர்.

இதேபோன்றுதான் மியூச்சுவல் ஃபண்ட்ஸும். எல்லா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களையும் ஒட்டுமொத்த ஒலிம்பிக் குழுவைப் போன்று நாம் கருதினால், ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் ஒரு குழுவாக இருக்கும். இது பல்வேறு டிராக் அண்ட் ஃபீல்ட் நிகழ்வுகளில் பங்கேற்கும். டிராக் அண்ட் ஃபீல்ட் நிகழ்வுக்கு உள்ளேயும் பல துணை வகைப்பாடுகள் உள்ளன என்று நாம் பார்த்தோம். அதேபோன்று, ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு உள்ளேயும் பல திட்டங்கள் உள்ளன.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்