டெப்ட் ஃபண்டுகளின் பல்வேறு வகைகள் என்னென்ன?

டெப்ட் ஃபண்ட்களின் பல்வேறு வகைகள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீட்டின் பாதுகாப்பு அல்லது முதலீட்டில் இருந்து வழக்கமான வருமானத்தைப் பெற விரும்புகின்ற மற்றும்/அல்லது குறுகிய காலகட்டத்துக்கு முதலீட்டைத் தக்க வைக்கின்ற முதலீட்டாளர்களுக்கு டெப்ட் ஃபண்ட்கள் பொருத்தமானது.

ஆனால், டெப்ட் ஃபண்ட்களில் பல்வேறு வகைகள் உள்ளன. 

வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை தொடங்கினால், எப்போது வேண்டுமானாலும் உங்களால் பணத்தை போடவும் எடுக்கவும் முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நீங்கள் பணத்தைப் பயன்படுத்தாத பட்சத்தில், சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது என்பது அவ்வளவு சரியானது அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் ஒரு நிலையான வைப்பைத் தொடங்க முடியும் - இதில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் அதிக வட்டி வீதத்தைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் தொடர்வைப்பையும் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யவேண்டியிருக்கும். இந்த அனைத்து முதலீடுகளுமே உங்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவை.

அதேபோன்று, மியூச்சுவல் ஃபண்ட்களிலும் டெப்ட் ஃபண்ட் வகைப்பாட்டின் கீழ், முதலீட்டாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பல்வேறு வகைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை பின்வருமாறு – லிக்விட் ஃபண்ட்கள், இன்கம் ஃபண்ட்கள், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிலையான முதிர்வுத் திட்டங்கள்.

முதலீட்டாளர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்