வெளியேற்றக் கட்டணங்கள் (லோட்) என்றால் என்ன?

வெளியேற்றக் கட்டணங்கள் (லோட்) என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஒரு நெடுந்தூரப் பயணத்தில், நீங்கள் ஒரு சாலை அல்லது பாலத்தினுள் நுழையும் போது மற்றும் வெளியேறும் போது சிலசமயங்களில் சுங்க வரி விதிப்பதுண்டு. பெரும்பாலான சூழல்களில், கட்டிடச் செலவுகளை மீட்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டுமே கட்டணங்களை விதிப்பதற்கு சுங்கப் பால நிறுவனம் அனுமதிக்கப்படுகிறது. அதன்பின்னர், அந்த நிறுவனம் எந்த சுங்க வரியும் விதிக்கக்கூடாது.

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும் போதும் சில வெளியேற்றக் கட்டணங்கள் (லோட்ஸ்) விதிக்கப்படும். ஆனால், நீங்கள் இப்போது பார்த்த சுங்கக் கட்டணங்களை விட இது மாறுபட்டது. 2009 ஆம் ஆண்டு வரை, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நுழையும்போது ஒரு கட்டணம் விதிக்கப்படும். ஆனால், இனி அது விதிக்கப்படாது. திட்டத்தில் இருந்து வெளியேறும்போது ஒருசில சூழல்களின் கீழ் சில திட்டங்கள் கட்டணம் வசூலிக்கின்றன, இது “வெளியேற்றக் கட்டணம்” எனப்படும்.

பெரும்பாலான சூழல்களில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தினுள் வெளியேறினால் மட்டுமே வெளியேற்றக் கட்டணங்கள் பொருந்தும். குறிப்பிட்ட காலகட்டத்தை விட அதிகக்காலம் திட்டத்தில் இருந்தால், வெளியேற்றக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது. வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், திட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறிவிடாமல் இருப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படுகிறது. “வெளியேற்றக் கட்டணத்தில்” கூட, மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குமுறை ஆணையமான SEBI, அதன் வசூலிக்கப்பட வேண்டிய வரம்பை நிர்ணயித்துள்ளது.

349
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்