மியூச்சுவல் ஃபண்டுகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு இயல்பான முதலீட்டு விருப்பமாக இருக்குமா?

சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஓர் உகந்த முதலீடாக இருக்குமா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஆமாம்! சுமாரான சேமிப்பு அல்லது குறைந்த அளவிலான தொகையுடன் முதலீட்டைத் தொடங்க விரும்பும் ஒரு முதலீட்டாளருக்கு கூட, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஓர் உகந்த முதலீடாக இருக்கும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு (SB அக்கவுண்ட்) வைத்திருக்கும் யாரும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்யத் தொடங்கலாம். மாதந்தோறும் ₹ 500* என்ற குறைந்த தொகை கூட சேமிக்கலாம், இது தொடர்ச்சியாக சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் சிறு முதலீட்டாளருக்கான பிற நன்மைகள் பின்வருமாறு-

  1. பரிவர்த்தனை செய்ய எளிதானது: முதலீடு செய்தல், மறு ஆய்வு செய்தல், நிர்வகித்தல் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களை பணமாக்குதல் ஆகிய அனைத்துமே எளிய செயல்முறைகள்தான்.
  2. முற்றிலும் வெளிப்படையான தன்மை: சிறிய அளவில் அல்லது முதல் முறை முதலீடு செய்யும் ஒருவர் அதிகபட்ச வெளிப்படைத் தன்மை, தெளிவான அறிவிப்புகள், உரிய நேரத்தில் கணக்குகளின் அறிக்கை கிடைப்பது போன்றவற்றையே எதிர்பார்ப்பார்.
  3. தொழில்முறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படுவது: தொழில்முறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு டைவர்சிஃபைடு போர்ட்ஃபோலியோவை நீங்கள் உருவாக்கலாம். அவர்கள் நன்கு ஆராய்ச்சி செய்து முதலீடு குறித்து முடிவுகளை எடுப்பார்கள்.
  4. எல்லா முதலீட்டாளர்களும் சமம்: ₹500 முதலீடு செய்தவருக்கும் ₹5 கோடி முதலீடு செய்தவருக்கும், மியூச்சுவல் ஃபண்ட் ஒரே விதத்திலேயே முதலீடு செய்யும். அதாவது, முதலீடு சிறியதா பெரியதா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், முதலீட்டாளர்களின் நன்மையை மனதில் கொண்டே நிர்வகிக்கப்படும்.
  5. லிக்விடிட்டி: ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளைப் போல் இல்லாமல், தேவைப்படும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பணமாக்குவது மிகவும் எளிது. நீங்கள் MFகளை ஃபண்ட் ஹவுஸ் மூலம் நேரடியாக பணமாக்கலாம் அல்லது இரண்டாம் நிலைச் சந்தையில் விற்கலாம். 

எந்த ஒரு முதலீட்டிலும் ரிஸ்க் என்பது இல்லாமல் இருக்காது. மியூச்சுவல் ஃபண்ட்களும் ட்ரேடிங் அளவு, லிக்விடிட்டி ரிஸ்க் போன்ற முதலீட்டு ரிஸ்க்குகளைக் கொண்டவையே. ஆனால், அதே சமயம் இவை சிறிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கு பலவிதமான பலன்களையும் அளிக்கின்றன.

நீங்கள் எவ்வளவு சிறிய முதலீட்டுடன் தொடங்கினாலும் சரி, மிதமான இலக்குகளைக் கொண்டிருந்தாலும் சரி, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது.

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

*குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: குறைந்தபட்ச SIP தொகையாக ரூ. 500 வரை பல மியூச்சுவல் ஃபண்ட்கள் அனுமதிக்கின்றன. சில ஸ்கீம்களின் முதலீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அதிகத் தொகை தேவைப்படலாம்.
^லாக்-இன் காலம்: மியூச்சுவல் ஃபண்ட்களில் லாக்-இன் காலம் இருக்கலாம். அதாவது அந்த லாக்-இன் காலம் முடிந்த பிறகே முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை ரிடீம் செய்ய முடியும்.

347
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்