பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஏற்றதாக இருக்குமா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பாத நபர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஏற்றதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சிலர், பாதுகாப்பான மற்றும் பரிச்சயமான தேர்வுகளைச் செய்து முதலீடு செய்ய விரும்புவர். புதிய ரெஸ்டாரன்ட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மெனுவில் உங்களுக்குப் பரிச்சயமில்லாத டிஷ்கள் உள்ளன. ஆனாலும், சாப்பிட்ட பின்னர் வருத்தப்படக்கூடாது என்பதற்காக உங்களுக்குப் பரிச்சயமான உணவுகளையே நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள். ‘கோஸ்கஸ் பனீர் சாலடுக்கு’ பதிலாக, நீங்கள் வழக்கமான ‘பனீர் கத்தி ரோலை’ ஆர்டர் செய்கிறீர்கள். அந்த ரெஸ்டாரண்டின் சேவைகள், சூழல் மற்றும் உணவை அனுபவித்து மகிழ்கின்ற அதே சமயத்தில், அந்த புதிய ரெஸ்டாரன்ட் குறித்த ஓர் அபிப்ராயம் உங்கள் மனதில் எழுகிறது.
 
இவ்வாறு ஒரு ரெஸ்டாரன்ட்டிலுள்ள மெனுவில் இருந்து சரியான உணவை ஆர்டர் செய்வதைப் போன்றுதான், இந்த மியூச்சுவல் ஃபண்ட்ஸும். நீங்கள் பங்குச் சந்தையில் இருந்து விலகியிருக்க விரும்பினால், உங்கள் நிதி இலக்குகளுக்காக டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட்களை அவை முதலீடு செய்யப்படுகின்ற இடத்தைச் சார்ந்து ஈக்விட்டி, டெப்ட் மற்றும் ஹைபிரிட், சொல்யூஷன் ஓரியண்டட் திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் என்று பரந்த அளவில் வகைப்படுத்தலாம்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் நீங்கள் முதலீடு செய்ய விரும்பாத பட்சத்தில், வங்கிகள், கார்ப்பரேட்கள், RBI உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் வெளியிடும் பாண்டுகளில் முதலீடு செய்கின்ற டெப்ட் ஃபண்ட்கள், கமர்ஷியல் பேப்பர்கள் போன்ற பணச் சந்தை சார்ந்த ஆவணங்கள், வங்கி CDகள், டிரஷரி பில்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்ற டெப்ட் ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்து பலனடையலாம். உங்கள் தொகை சிறப்பான வகையில் பெருகுவதற்கு டெப்ட் ஃபண்ட்கள் உதவிடும் ஏனெனில், வங்கி FD, PPF மற்றும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற வழக்கமான தேர்வுகளை விட, அதிக வரிப் பயனுள்ள ரிட்டர்ன்களை இவை வழங்கிடும். 
 

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்