இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர்
உங்கள் தற்போதைய செலவினங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுங்கள்.
எதிர்கால செலவு₹0
எதிர்கால செலவு₹0
பொறுப்புதுறப்பு
- கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
- இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
- மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.
- பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
பிற கால்குலேட்டர்கள்

உங்கள் மாதாந்திர SIP முதலீட்டின் எதிர்கால மதிப்பைக் கணக்கிடுங்கள்.

உங்கள் இலக்கை அடையத் தேவையான மாதாந்திர SIP முதலீட்டைக் கண்டறியுங்கள்.

உங்கள் தற்போதைய முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, தேவையான SIP அல்லது லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடுங்கள்.

முதலீட்டைத் தாமதிக்கப் போகிறீர்களா? உங்கள் செல்வப் பெருக்கத்தில் அந்தத் தாமதம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்ஃபிளேஷன் பற்றி மேலும் அறிய
கால்குலேட்டர்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்




பணவீக்கம் என்பது பொருட்களின் விலைகள் உயர்வதுடனும், தனிநபரின் வாங்கும் திறன் குறைவதுடனும் தொடர்புடையது. எனவே பணவீக்கம் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணியாகிறது. ஒவ்வொருவரும் தங்களது வாங்கும் திறனின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது எதிர்காலத்தில் அவர்களது நிதியை நிர்வகிக்க உதவிடும்.
பணவீக்கம் ஏறிக்கொண்டே இருக்கையில், எதிர்காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், அதைச் செய்ய நீங்கள் இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர் என்பது என்ன?
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர் என்பது உங்கள் வாங்கும் திறனின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடப் பயன்படுகின்ற ஓர் ஆன்லைன் கருவியாகும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட அளவு பணத்தின் மதிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்தக் கருவி காட்டும்.
பணவீக்கம் என்பது என்ன? உங்கள் சேமிப்புகளை அது எப்படி பாதிக்கிறது?
பணவீக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தில் காலப்போக்கில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வைக் குறிக்கிறது. காலப்போக்கில் வாங்கும் திறனில் ஏற்படும் குறைவாகப் பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் பொதுவாக உங்கள் சேமிப்புகளின் மதிப்பைக் குறைக்கும் பண்பு கொண்டது, குறிப்பாக நிலையான பே-அவுட் கொடுக்கும் உங்கள் முதலீடுகளால் விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் அவை இதனால் பாதிக்கப்படும். உங்கள் சேமிப்புகளை பணவீக்கம் பாதிக்கின்ற முக்கியமான வழிகள் பின்வருமாறு:
வட்டி விகிதங்கள்: பணவீக்கம் சேமிப்புகளின் வட்டி விகிதங்களை பாதிக்கும். ஏனென்றால் உங்கள் சேமிப்புகளுக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் ஒப்பீட்டில் பணவீக்க விகிதத்தைவிடக் குறைவாக இருக்கும்.
மதிப்பு குறைதல்: சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் செய்த தொகை அப்போதைய விகிதத்தின்படி வளர்ந்து வரும், ஆனால் பணவீக்கத்தால் விலையேற்றம் ஏற்படுவதால் அதன் மதிப்பு குறைந்து போயிருக்கும்.
ரொக்கம்: பணவீக்கம் ரொக்கத்தை பெருமளவு பாதிக்கக்கூடியது - காலப்போக்கில் ரொக்கம் பெருகாது என்பதே இதற்குக் காரணம். உங்கள் நிலையான சேமிப்புகளில் பெரும்பாலும் ரொக்கமாக இருந்தால், அவற்றின் மதிப்பு கணிசமாகக் குறையலாம்.
இதுபோன்ற வழிகளில் பணவீக்கம் உங்கள் சேமிப்பையும் வாங்கும் திறனையும் முதலீடுகளையும் இன்னும் பல நிதி சார்ந்த அம்சங்களையும் பாதிப்பதால், இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர் என்று ஒன்று இருப்பது மிகவும் பயனுள்ள விஷயமாகிறது.
பணவீக்கத்தை எப்படி வெல்வது?
நாம் தடுப்பு நடவடிக்கைகள் சிலவற்றை எடுப்பதன் மூலம் பணவீக்கத்தை வெல்லலாம்.
பணவீக்கத்தை வெல்ல ஒருவர் கீழே உள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:
1. பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜ்: ஒருவரது பணத்தின் வாங்கும் திறன் குறைவதிலிருந்து பாதுகாக்கும் வகையிலான முதலீடுகளை பணவீக்க ஹெட்ஜ்கள் என்கிறோம். இந்த முதலீடுகள் பணவீக்க சுழற்சிகளின் போது மதிப்பைத் தக்கவைக்க, சொல்லப்போனால் அதிகரிக்கவும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ஸ்டாக்குகள், ETFகள் போன்றவை இதற்கு சில உதாரணங்களாகும்.
2. உங்கள் வருமானத்தை டைவர்சிஃபை செய்யுங்கள்: பணவீக்கத்தை சமாளிக்க, ரொக்கம், பாண்டுகள், ஈக்விட்டிகள், மாற்று முதலீடுகள் போன்ற பலவற்றில் உங்கள் அசெட்டுகளை டைவர்சிஃபை செய்து வைத்திருக்க வேண்டும். உங்கள் நிதியின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தை இது குறைக்கும்.
3. எதிர்காலத்தை கவனத்தில் கொண்ட நிதி மேலாண்மை: பணவீக்க கால்குலேட்டரைப் பயன்படுத்துவது, முன்கூட்டியே திட்டமிடுவது, நிதி சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது, உங்கள் போர்ட்ஃபோலியோவை டைவர்சிஃபை செய்து வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகள் பணவீக்கத்திலிருந்து எதிர்காலத்தில் உங்களை சிறப்பாகப் பாதுகாக்க உதவலாம்.
பணவீக்கம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
பணவீக்கம் CPI குறியீட்டை (கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ்) வைத்துக் கணக்கிடப்படுகிறது. CPI என்பது நுகர்வோர் வாங்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒரு கற்பனைக் கூடையில் இருந்து சராசரி விலைகளை ஆய்வு செய்வதன் மூலம் கணக்கிடப்படும் ஒரு அளவீடாகும். பின்வரும் வழிகளில் நீங்கள் CPI-ஐக் கணக்கிடலாம்:
CPI = (நடப்பு ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்ட நிலையான கூடையின் விலை/அடிப்படை ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்ட நிலையான கூடையின் விலை) *100
CPI கணக்கிடப்பட்ட பிறகு, பணவீக்கம் இந்த சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது:
பணவீக்கம் = ((CPI x+1 – CPIx)/ CPIx)*100
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர் இந்த ஃபார்முலாவின் அடிப்படையில் வேலை செய்து உங்களுக்கு உடனடி மதிப்பீடுகளை வழங்குகிறது.
எதிர்கால மதிப்பை எப்படிக் கணக்கிடுவது?
எதிர்கால மதிப்பு கால்குலேட்டர்
எதிர்கால மதிப்பு (FV) என்பது, ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில், எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு அசெட்டின் மதிப்பாகும். இந்த ஃபார்முலாவைக் கொண்டு நீங்கள் FV-ஐக் கணக்கிடலாம்:
FV = PV*(1+i)^n
PV: = தற்கால மதிப்பு (Present Value)
i: = வட்டி விகிதம்
n: = கால அளவுகளின் எண்ணிக்கை
ஓர் உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்துகொள்ளலாம்.
X என்பவரிடம் அசெட்டுகள் உள்ளன, எதிர்காலத் தேதியில் அவற்றின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அளவிடப்பட வேண்டிய விஷயங்கள்:
தற்கால மதிப்பு (PV): 2,50,000
வளர்ச்சி விகிதம் (i): 12%
கால அளவு (n): 5 வருடங்கள்
FV = 2,50,000*(1+12%)^5
எதிர்கால மதிப்பு = 4,40,585
பணவீக்க கால்குலேட்டரின் பலன்கள்
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர் இந்த வழிகளில் எல்லாம் பயனுள்ளதாக இருக்கும்:
1. பயன்படுத்த எளிது: இந்த கால்குலேட்டர் பயனருக்கு எளிதானது, பார்த்தவுடன் யார் வேண்டுமானாலும் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
2. மனிதப் பிழைகள் தவிர்க்கப்படும்: கால்குலேட்டர் உங்களுக்கு அதிகபட்ச துல்லியமான மதிப்பீடுகளை வழங்கும் (முன்பே புரோகிராம் செய்யப்பட்ட அல்காரிதத்தின் அடிப்படையில் இது வேலை செய்வதால்), இதனால் மனிதர்கள் கணக்கிடும்போது ஏற்படக்கூடிய பிழைகள் தவிர்க்கப்படுகின்றன.
3. சிறந்த நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது: பணவீக்க கால்குலேட்டரைப் பயன்படுத்தி நீங்கள் முன்கூட்டியே திட்டமிடலாம். பொருளாதாரத்தின் நகர்வின் அடிப்படையில் உங்கள் முதலீடுகள், செலவுகள் மற்றும் சேமிப்புகளுக்கான உத்திகளை வகுத்துக் கொள்ளலாம்.
4. நேரம் மிச்சமாகிறது: கைமுறையாகக் கணக்கிட அதிக நேரம் ஆகும், அது சிரமமானதும் கூட. இந்த கால்குலேட்டர் வழங்கும் மதிப்பீடுகள் கிட்டத்தட்ட உடனடியாகக் கிடைக்கும்.
5. எதிர்கால மதிப்பைக் கணக்கிட உதவுகிறது: பணவீக்க விகிதத்திற்கான சரியான கணக்கீடுகளைச் செய்வதன் மூலம், உங்கள் அசெட்டுகளின் எதிர்கால மதிப்பை நீங்கள் மதிப்பிட முடியும். எதிர்காலத் தேதியில் உங்கள் பணம் அல்லது அசெட்டுகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்ள, துல்லியமான பணவீக்க/வளர்ச்சி விகிதம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
பொதுவான கேள்விகள்
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டரைப் பயன்படுத்துவதால், எதிர்காலத்தில் உங்கள் வாங்கும் திறன் குறைவதைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும், இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் உங்கள் நிதியைத் திட்டமிட இது உதவுகிறது.