மியூச்சுவல் ஃபண்ட் கொண்டு செல்வத்தை உருவாக்க முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட் கொண்டு செல்வத்தை உருவாக்க முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

செல்வத்தை உருவாக்கும் வழியை விரும்புபவர்களுக்கு, தங்களின் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் செல்வத்தை உருவாக்குவதற்கு வர்த்தகம் மற்றும் வணிகம் உதவுகிறது. பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், தொழில்முனைவோர்களின் வர்த்தகங்களின் முதலீட்டாளர்களாக நாம் ஆக முடியும். தொழில்முனைவோர்களும், மேலாளர்களும் தங்களின் வர்த்தகங்களை சிறப்பாகவும், இலாபகரமாகவும் நடத்தும் போது, பங்குதாரர்கள் நன்மைகளைப் பெறுவர். இதனை வைத்துப் பார்க்கும் போது, செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளது.

ஆனால், எந்தப் பங்குகளை வாங்குவது மற்றும் எப்போது வாங்குவது என்று நமக்கு எப்படித் தெரியும்?

இந்த இடத்தில்தான், நாம் நிபுணர்களின் உதவியைக் கருதுகிறோம். ஒரே சமயத்தில் பல்வேறு வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஒரு பெரும் நிதித்தொகுப்பின் ஆதாயத்தையும் அவை பெற்றுத் தருகின்றன. இது புரதம், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்கள் போன்றவை அடங்கிய சமச்சீரான உணவு நமக்குத் தேவைப்படுவதைப் போன்றது. ஒரே வகையான ஊட்டச்சத்தை மட்டுமே உட்கொண்டால், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும். அதேபோன்று, ஒரு பல்வகைப்பட்ட ஈக்விட்டி ஃபண்டில், நீங்கள் பொருளாதாரத்தின் பல பிரிவுகளில் முதலீடு செய்ய முடியும், மற்றும் சாத்தியமான இழப்புக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.

தொழில்முறையாக நிர்வகிக்கப்படும், பல்வகைப்பட்ட ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து, உங்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கு நீண்டகாலம் முதலீட்டைத் தக்க வைத்திடுங்கள்.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்