அடிக்கடி எனது முதலீடுகளை எப்படிக் கண்காணிப்பது?

வழக்கமான முறையில், என்னுடைய முதலீடுகளை எவ்வாறு கண்காணிப்பது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

என் முதலீடுகளின் முன்னேற்றத்தை எவ்வாறு கண்காணிப்பது என்று முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நினைப்பதுண்டு.

இது கிரிக்கெட் மேட்சில் ஒரு இலக்கை அடைய முயற்சிப்பது போன்றதுதான். ஒரு கிரிக்கெட் மேட்சில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு எவ்வளவு ரன்கள் எடுக்கவேண்டும், எவ்வளவு விக்கெட்கள் மற்றும் எவ்வளவு ஓவர்கள் உள்ளன என்ற சமன்பாடு தெரிந்திருக்கும்.

இதேபோன்றுதான் நிதி இலக்குகளை அடைவதற்காக முதலீடு செய்வது என்று வரும்போதும் இருக்கும். நிதி இலக்கை உங்களின் இலக்கு ஸ்கோராக கருதிக்கொள்ளுங்கள்-

  1. இதுவரை நீங்கள் சேர்த்த தொகைதான், நீங்கள் ஸ்கோர் செய்துள்ள ரன்கள்.
  2. இனிமேல் சேர்க்கவிருக்கும் தொகைதான், ஸ்கோர் செய்யப்பட வேண்டிய ரன்கள் என்றும் உங்களுக்கு இருக்கக்கூடிய காலகட்டம்தான் மீதமுள்ள ஓவர்கள் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள்.
  3. விக்கெட்களின் நிலைமையையும், பவுலர்களின் தரத்தையும் பல்வேறு அபாயங்களுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் - அதாவது தேசிய அல்லது சர்வதேசப் பொருளாதாரம்; சர்வதேச மூலதன ஓட்டங்கள்; நாட்டிலுள்ள அரசியல் சூழ்நிலைகள்; சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் வரிகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை தொடர்புடையதாக இருக்கலாம்.
  4. இந்தச் சூழலில், நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பெறுகின்ற கணக்கு அறிக்கைதான் ஸ்கோர் போர்டு.
  5. ஒருவர் தனது முதலீடுகளின் மதிப்பைச் சரிபார்ப்பதற்கான ஆன்லைன் டூல்களும், மொபைல் ஆப்களும் கூட கிடைக்கின்றன.
350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்