எனது நிதி இலக்குகளை எப்படிப் பூர்த்திசெய்வது?

என்னுடைய நிதி இலக்குகளை எவ்வாறு நான் பூர்த்தி செய்வது? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீட்டைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, உங்களுக்கு தேவைப்படுகின்ற சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். பின்வரும் சூழலைச் சிந்தியுங்கள்.

நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போது, எதில் செல்லவேண்டும் என்று எவ்வாறு தீர்மானிப்பீர்கள்? பயண இடத்திற்கு நடந்தே செல்ல விரும்புவீர்களா, ஆட்டோவில் செல்வீர்களா, இரயிலில் செல்வீர்களா அல்லது விமானத்தில் செல்வீர்களா என்பது உங்கள் பயண இடத்தையும், உங்கள் பட்ஜெட்டையும் மற்றும் பயண நேரத்தையும் பொறுத்து இருக்கும்.

உங்கள் நிதி இலக்குகளுக்குத் திட்டமிடும் போதும், இதே போன்ற கொள்கைகளை பயன்படுத்த வேண்டும்.

வெவ்வேறு பயணத் தேவைகளுக்கு, பல வகையான போக்குவரத்துகள் இருப்பதைப் போன்று - வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப, பல திட்டங்கள் (அல்லது திட்டங்களின் கலவைகள்) உள்ளன.

குறுகிய காலகட்டத்துக்கான தேவைகளுக்கு லிக்விட் ஃபண்ட்ஸை ஒருவர் கருதலாம்; மற்றும் நடுத்தர காலகட்டத் தேவைகளுக்கு இன்கம் ஃபண்ட்ஸையும், நீண்டகாலத் தேவைகளுக்கு ஈக்விட்டி ஃபண்ட்ஸ் (அல்லது வெவ்வேறு ஃபண்ட்ஸின் கலவைகளையும்) ஒருவர் கருதலாம். வெவ்வேறு முதலீட்டாளர்கள் தாங்கள் எடுக்க விரும்பும் அபாயத்துக்கு ஒரே சொத்து வகைப்பாட்டின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

ஒவ்வொரு முதலீட்டாளரின் தேவைக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மத்தியில் தீர்வுகள் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, எது பொருத்தமான தீர்வு என்பதைக் கண்டறிவதற்கு, ஒருவரின் தனிப்பட்ட தேவையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

350
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்