ETF-இல் நான் முதலீடு செய்யலாமா?

ETF-இல் முதலீடு செய்ய வேண்டுமா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

குறைந்த செலவில் ஸ்டாக் மார்கெட் அனுபவத்தைப் பெற ETF முதலீடு சிறந்த வழியாகும். இவற்றில் எளிதில் பணமாக்கும் வசதி உள்ளது. இவை ஸ்டாக்ஸ் போன்றே எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டு டிரேடிங் செய்யப்படுவதால் உடனடி செட்டில்மென்ட்டும் கிடைக்கும். ETFகள் ஸ்டாக் இன்டெக்ஸ் போன்றே செயல்படுவதாலும், டைவர்சிஃபிகேஷன் வசதியும் இவற்றில் கிடைப்பதாலும் இவற்றில் ரிஸ்க் குறைவு. நீங்களே தேர்வு செய்து சில ஸ்டாக்குகளில் முதலீடு செய்யும்போது டைவர்சிஃபிகேஷன் வசதி கிடைக்காது.

நீங்கள் விரும்பும்போது உடனடியாக விற்று வாங்குவது (ஷார்ட் செல்லிங்), மார்ஜினில் வாங்குவது போன்றவற்றை எளிதில் செய்ய முடியும் என்பதால் ETFகள் மிகவும் நெகிழ்த்தன்மை கொண்டவை எனலாம். ETFகள் பல வகையான மாற்று முதலீட்டு வழிகளையும் அளிக்கின்றன. உதாரணம்: கமாடிட்டியில் முதலீடு செய்தல் & சர்வதேச செக்யூரிட்டிகளில் முதலீடு செய்தல். உங்கள் நிலையை ஹெட்ஜிங் செய்வதற்காக ஆப்ஷன்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ் ஆகியவற்றையும் நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இது முடியாது.

எனினும், ETFகள் எல்லாருக்கும் ஏற்றதல்ல. குறைந்த ரிஸ்க்கில், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, ஈக்விட்டி முதலீட்டு அனுபவத்தைப் பெற, புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்ட்கள் மிகவும் ஏற்றவை. மொத்தமாக அதிகத் தொகை வைத்திருந்து, ரொக்கத்தை எப்படி முதலீடு செய்வது என்று இன்னும் முடிவு செய்யாதவர்களுக்கும் ETFகள் ஏற்றவை. அவர்கள் தற்சமயத்திற்கு ETF-இல் முதலீடு செய்யலாம், ரொக்கம் சரியாகக் கையாளப்படும் வரை ஓரளவு ரிட்டர்ன் பெறலாம். சரியான ETF-ஐத் தேர்வுசெய்வதற்கு, பெரும்பாலான சில்லறை முதலீட்டாளர்களை விட நிதி மார்கெட் பற்றிய அதிக புரிதல் தேவை. ஆகவே உங்கள் ETF முதலீடுகளை நிர்வகிக்க சிறிதளவு நேரடி முதலீட்டு ஈடுபாடு மிகவும் அவசியம்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்