ரிஸ்க் மற்றும் ரிட்டர்னுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன?

ஆபத்திற்கும் வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நீங்கள் அடிக்கடி இதைக் கேட்கலாம், ‘அதிக ரிஸ்க், அதிக ரிட்டர்ன்’. இது உண்மையா?

‘ரிஸ்க் (அபாயம்)’ என்பது முதலீட்டு இழப்பின் நிகழ்தகவாகவோ அல்லது முதலீட்டு மதிப்பிலுள்ள ஏற்ற இறக்கங்களாகவோ அளவிடப்பட்டால், ஈக்விட்டி போன்ற சொத்து வகுப்புகள் சந்தேகத்துக்கு இடமின்றி அதிக ரிஸ்க் கொண்டவை அதே சமயம் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை அல்லது அரசாங்கப் பத்திரம் சற்று குறைவான ரிஸ்க்கானவை.

மியூச்சுவல் ஃபண்ட் உலகில், லிக்விட் ஃபண்ட் குறைவான ரிஸ்கையும், ஈக்விட்டி ஃபண்ட் அதிக ரிஸ்கையும் கொண்டவை.

எனவே, ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான ஒரே காரணம், அதிக வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே. இருந்தாலும், கவனமாக ஆராய்ந்த பிறகு ஈக்விட்டியில் முதலீடு செய்து, பொறுமையுடன் நீண்டகாலம் காத்திருப்பவர்கள் மட்டுமே அதிக வருமானத்தைப் பெற முடியும். பரவலாக முதலீடு செய்வதன் மூலமும், நீண்டகாலத்துக்கு முதலீடு செய்வதன் மூலமும் ஈக்விட்டியில் உள்ள ரிஸ்கை குறைத்திட முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஒவ்வோரு வகையும் வெவ்வேறு வகையான ரிஸ்க்குகளை கொண்டுள்ளது, அவை - கிரெடிட் ரிஸ்க், வட்டி விகித ரிஸ்க், லிக்விடிட்டி ரிஸ்க், மார்க்கெட்/பிரைஸ் ரிஸ்க், பிசினஸ் ரிஸ்க், ஈவென்ட் ரிஸ்க், ரெகுலேட்டரி ரிஸ்க் போன்றவை. உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் / முதலீட்டு ஆலோசகர் மற்றும் நிதி மேலாளர் போன்ற நிதி நிபுணர்களின் நிபுணத்துவம், பல்வகைப்படுத்துதல் போன்றவை ஆபத்துகளை கடக்க உதவும்.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்