ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான சரியான தொகை எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கான உகந்த தொகை என்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

முதலீடு செய்வதற்கான உகந்த தொகை குறித்து முதலீட்டாளர்களின் மனதில் பல கேள்விகள் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட்களை மற்றொரு முதலீட்டு வாய்ப்பாகவே மக்கள் கருதுகின்றனர். இது உண்மையா? நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளைப் போன்று, மியூச்சுவல் ஃபண்ட்களும் மற்றொரு முதலீட்டு வாய்ப்புதானா?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டு வாய்ப்பு அல்ல, ஆனால் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை அணுகக்கூடிய ஒரு பாலமாக இதனைக் கருதலாம்.

உதாரணத்திற்கு, இந்தச் சூழலை நினைத்துப் பாருங்கள். ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு போகும் போது, நீங்கள் ஆர்டர் செய்து உண்ணலாம் அல்லது பப்ஃபே/தாலி அல்லது முழுச் சாப்பாடு வாங்கி உண்ணலாம்.

முழு தாலி அல்லது சாப்பட்டை மியூச்சுவல் ஃபண்ட்ஸுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதேசமயத்தில் ஸ்டாக்குகள், பாண்டுகள் போன்றவற்றை தனித்தனியாக ஆர்டர் செய்வதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால், தாலி ஆர்டர் செய்யும் போது, நேரமும் பணமும் மிச்சமாகிறது.

இதில் முக்கியமானது என்னவென்றால், ஆரம்பக் கட்டத்திலேயே, முதலீடு செய்யத் தொடங்கி, உங்கள் சம்பாத்தியம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் முதலீடுகளையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இது, நீண்டகாலத்தில் உங்களுக்குச் சிறந்த ரிட்டர்ன்களைப் பெற்றுத் தரும்.

344
347
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்