ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் மற்றும் ரிஸ்க் காரணிகள் என்னென்ன?

ஒரு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யும் முன்பு ஒருவர் என்னென்ன தகவல்களையும் ரிஸ்க் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு ஒரு ஈக்விட்டி ஃபண்டைத் தேர்வுசெய்வதற்கு, இரண்டு நிலைகளைக் கொண்ட, முறையான தேர்ந்தேடுப்புச் செயல்முறை அவசியம். முதல் நிலை உங்களைப் பற்றியது. முதலில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் அல்லது நிதி இலக்கில் ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஏன் தேவைப்படுகிறது என்ற தேவையை அடையாளம் காண வேண்டும், அதோடு அதற்குரிய கால வரம்பையும், ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டின் வகையையும் அடையாளம் காண வேண்டும், உங்கள் ரிஸ்க் தாங்கிக்கொள்ளும் திறனின் மதிப்பீட்டையும் செய்ய வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் செய்து முடித்த பிறகு, இருக்கின்ற ஃபண்ட்களில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே அடுத்த படியாகும். அதாவது இரண்டாவது நிலை.

ஆகவே, இந்த இரண்டாவது நிலையில், ஃபண்ட்களின் குறிப்பிட்ட தகவல்களையும், பல்வேறு ரிஸ்க் காரணிகளையும் ஆய்வு செய்து, தரம் அடிப்படையிலான அணுகுமுறையில் பொருத்தமான எல்லா ஃபண்ட்களையும் தேடிக் கண்டறிவீர்கள். ஃபண்டின் போர்ட்ஃபோலியோ, விண்ட்டேஜ், ஃபண்ட் மேனேஜர்கள், செலவின விகிதம், அதன் பெஞ்ச்மார்க், குறிப்பிட்ட கால அளவில் அதன் பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடுகையில் அது எப்படிச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது போன்ற தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும்.

போர்ட்ஃபோலியோவைப் பார்க்கும்போது, துறை வாரியான ஒதுக்கீடு, ஸ்டாக் தேர்வு போன்றவற்றில் அது எந்த அளவுக்கு டைவர்சிஃபை செய்யப்படுகிறது என்று பார்க்க வேண்டும். அந்த ஃபண்டின் முதன்மையான 10 துறைகள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங்குகளைப் பார்த்து இதனை மதிப்பிடலாம். விண்ட்டேஜைப் பார்க்கும்போது, அந்த ஃபண்ட் எத்தனை பொருளாதார சுழற்சிகளை எதிர்கொண்டு நிலைத்துள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள முடியும். ஸ்டாக் விலைகள் நீடித்த காலத்திற்கு ஏறுமுகத்தில் இருக்கும்போது (புல் ரன்), ஃபண்ட்கள் அந்த புல் மற்றும் பேர் காலகட்டத்தின் முழு சுழற்சியிலும் எப்படிச் செயல்பட்டுள்ளன என்பதே, அந்த போர்ட்ஃபோலியோவின் சரிசெய்துகொள்ளும் திறனைக் காட்டும். ஃபண்ட் மேனேஜரின் டிராக் ரெக்கார்டும் ஃபண்டின் விண்ட்டேஜும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாகும். ஃபண்ட் மேனேஜர் நிர்வகிக்கின்ற பிற ஃபண்ட்களை ஆய்வு செய்வதன் மூலம் அவரது டிராக் ரெக்கார்டை நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

செலவின விகிதம் என்பது, செயல்முறையில் ஒரு ஃபண்ட் எந்த அளவுக்கு நன்றாக நிர்வகிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் முக்கியமான அளவீடாகும். இது ஃபண்ட் பெர்ஃபார்மன்ஸில் இருந்து வேறுபட்டது. செலவின விகிதம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு முதலீட்டாளருக்கு நல்லது.

அடுத்ததாக, திட்டவிலக்கம் (ஸ்டாண்டர்டு டீவியேஷன்), பீட்டா போன்ற முக்கியமான ஈக்விட்டி ஃபண்டின் ரிஸ்க் இண்டிகேட்டர்களைப் பார்க்க வேண்டும். திட்டவிலக்கத்தை வைத்து, ஒரு ஃபண்டின் ரிட்டர்ன்ஸ் எந்த அளவுக்கு ஏற்ற இறக்கம் கொண்டுள்ளது என்றும் அதன் ரிட்டர்ன்ஸில் என்ன விதமான ஏற்ற இறக்கங்களை எதிர்பார்க்கலாம் என்றும் புரிந்துகொள்ளலாம். திட்டவிலக்கம் அதிகமாக இருந்தால், ஃபண்டின் ரிட்டர்ன்ஸ் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம், அதாவது நீங்கள் பெரும் ரிட்டர்ன்ஸ் அந்த ஃபண்டின் எதிர்பார்க்கப்படும் சராசரி ரிட்டர்னில் இருந்து அதிக அளவு ஏற்ற இறக்கம் கொண்டிருக்கும் (அதிகரிக்கவும் செய்யலாம் குறையவும் செய்யலாம்). பீட்டா என்பது மார்க்கெட்டின் மாற்றங்களுக்கு ஏற்ப ஒரு ஃபண்ட் எந்த அளவுக்கு எதிர்வினை புரிகிறது என்பதைக் குறிக்கும் அளவீடாகும். பீட்டா 1-க்கும் அதிகமாக இருந்தால், மார்க்கெட்டின் மாற்றங்களால் அந்த ஃபண்டின் NAV எளிதில் பாதிக்கப்படும் என்று புரிந்துகொள்ளலாம். ஆகவே, மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கும்போது ஃபண்ட் மார்க்கெட்டை விட அதிகமாக உயரும், மார்க்கெட் இறங்குமுகத்தில் இருக்கும்போது மார்க்கெட்டைவிடக் குறைவாகச் செல்லும். பீட்டா 1-க்கு சமமாக இருந்தால், மார்க்கெட்டின் மாற்றங்களுக்கு ஏற்ப ஃபண்டின் NAV அதிக வித்தியாசமில்லாமல் நெருக்கமாகவே மாறும். குறைந்த ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களின் பீட்டா மதிப்பு வழக்கமாக 1-க்குக் குறைவாகவே இருக்கும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் முன்பு, ஃபண்ட்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கும் அவற்றை ஆய்வு செய்வதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள் அல்லது நிதி ஆலோசகரிடம் வழிகாட்டுதல் பெறுங்கள்.
 

345
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்