மியூச்சுவல் ஃபண்டுகளில் லாக்-இன் காலம் என்றால் என்ன?

லாக்-இன் காலம் என்றால் என்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

சில வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் உங்கள் முதலீட்டில் ‘லாக்-இன் காலத்தை’ வைத்திருக்கின்றன. இவற்றில் டெப்ட் ஃபண்டுகளில் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS), ஃபிக்ஸடு மெச்சூரிட்டி பிளான்கள் (FMP) மற்றும் குளோஸ்டு எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் அடங்கும். லாக்-இன் காலம் என்பது முதலீடு செய்பவர்கள் தங்களின் முதலீட்டை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வைத்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டு யூனிட்களை ரிடீம் செய்யவோ விற்கவோ கூடாது.   

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தைப் பொறுத்து லாக்-இன் காலங்கள் வேறுபடலாம். உதாரணமாக, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS), மூன்று வருடங்கள் லாக்-இன் காலம் உள்ள ஒரு வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டு ஆகும். அதாவது, முதலீடு செய்யும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் முடிவடையும் வரை நீங்கள் அந்த யூனிட்டுகளை விற்கவோ, ரிடீம் செய்யவோ கூடாது. அதேபோல், குறிப்பிட்ட குளோஸ்டு எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் லாக்-இன் காலம் அந்தத் திட்டத்தின் சலுகை ஆவணத்தில் உள்ளது போல இருக்கலாம். இது தவிர, மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் முதலீடுகளில் இருந்து உருவான ரிட்டர்ன்கள் லாங் டெர்ம் கேபிட்டல் கெயின்ஸ் (LTCG) என்று வகைப்படுத்தப்படும். LTCG-க்கான வரி விகிதம், வழக்கமான வருமானத்திற்கு (தனிநபரின் வரிக்குரிய வருமானத்தைப் பொறுத்தது) விதிக்கப்படும் விகிதத்தைவிடக் குறைவு. எனவே, லாக்-இன் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

எனினும், ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் லாக்-இன் காலம் இல்லை. அவற்றின் யூனிட்டுகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம்.

டெப்ட் ஃபண்டுகளில் உள்ள ஃபிக்ஸடு மெச்சூரிட்டி பிளான்களுக்கு, லாக்-இன் காலம் முடியும் வரை உங்கள் முதலீட்டை நீங்கள் வைத்திருக்க வேண்டும், இது ஃபிக்ஸடு டெர்ம் எனப்படும். அந்தக் காலத்திற்குப் பிறகு, உங்கள் யூனிட்டுகளை நீங்கள் ரிடீம் செய்யலாம். லாக்-இன் என்பது வரித் திட்டமிடலுக்கானது மட்டுமல்ல, அடிப்படையான டெப்ட் அசெட்டுகளில் இருக்கும் லாபத்தைப் புரிந்துகொள்வதற்கானது, மெச்சூரிட்டி வரும் வரை இதை வைத்திருக்க வேண்டும். 

குறுகிய காலத்தில் டிரேடிங் செய்வது மற்றும் லாபத்தை மட்டுமே கவனித்தில் கொள்வதைத் தவிர்ப்பதற்காகவே லாக்-இன் காலங்கள் செயல்படுத்தப்படுகிறது. இது நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யும் பழக்கத்தை உருவாக்க உதவுகிறது. 

லாக்-இன் காலத்தின் முக்கியத்துவம்

  1.  நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய ஊக்கப்படுத்துகிறது
  2.  சந்தை வீழ்ச்சியடையும்போது உடனடியாக வெளியேறுவதைத் தடுக்கிறது
  3.  செயல்திறனில் மட்டுமே கவனம் செலுத்த ஃபண்டு மேனேஜர்களை அனுமதிக்கிறது
  4.  ரிட்டர்ன்களில் இருக்கும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கிறது

லாக்-இன் காலத்திற்குப் பிறகு ஃபண்டின் வகையைப் பொறுத்து, உங்கள் முதலீட்டை உடனடியாக விற்பதற்குப் பதிலாக, அதை மதிப்பிடுகிறது. உங்கள் எதிர்பார்ப்புகளை இது பூர்த்திசெய்தால், இதை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது மேலும் முதலீடு செய்யலாம்.

உங்களது நீண்டகால நிதி இலக்குகளுடன் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை ஒருங்கிணைப்பது, முறையான உத்தியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலம் நீங்கள் கூட்டுவட்டியின் ஆற்றலை பயன்படுத்தி அவற்றை அடையலாம்.

பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

282
285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்