FMPகள் என்பவை எவை & நான் ஏன் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும்?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (Fixed Maturity Plans/FMP) என்பவை, குறிப்பிட்ட மாறா முதிர்ச்சி கொண்ட குளோஸ்-என்டட் டெப்ட் ஃபண்ட்களாகும், கிட்டத்தட்ட ஃபிக்ஸட் டெப்பாசிட் போன்றவை எனலாம். ஆனால் FMPகள் செர்ட்டிஃபிகேட் ஆஃப் டெப்பாசிட்ஸ் (CD), கமர்ஷியல் பேப்பர்ஸ் (CP), பிற பணச் சந்தைப் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்ட்கள், மதிப்பு மிக்க நிறுவனங்களின் நான்-கன்வர்ட்டிபில் டிபென்ச்சர்கள் (NCD) போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளிலோ அரசாங்க செக்யூரிட்டிகளிலோ முதலீடு செய்து, ஸ்கீமின் கால அளவு வரை சீராக வளர்ந்து முதிர்வடையும். மேலும், ஃபிக்ஸட் டெப்பாசிட்களைப் போலன்றி, FMPகளில் லாப விகிதத்திற்கு உத்தரவாதம் கிடையாது.

ஃபண்டின் கால அளவு முடியும்போது முதிர்வடைகின்ற குளோஸ்-என்டட் செக்யூரிட்டிகள் என்பதால், ஓப்பன்-என்டட் டெப்ட் ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் FMPகளின் லிக்விடிட்டியும் வட்டிவிகித ரிஸ்க்கும் குறைவு. ஃபிக்ஸட் டெப்பாசிட்டுகளைப் போல சிறிது காலம் வரை உங்கள் பணத்தை இட்டு வைக்க வழி தேடுகிறீர்கள் எனில், FMPகள் மிகவும் ஏற்றவை. FMPகள் வரிவிலக்கு பெறுவதில் பலன் கொடுப்பவை. FMPகளில் கிடைக்கும் ரிட்டர்ன் பணவீக்கத்திற்கு ஏற்ப சரிக்கட்டப்படுவதால், ஃபிக்ஸட் டெப்பாசிட்களுடன் ஒப்பிடுகையில், இன்டெக்சேஷன் காரணமாக இவற்றில் வரிச் சேமிப்பு அதிகம். டெப்ட் ஃபண்ட்கள் இன்டெக்சேஷன் அனுகூலங்களுடன் கூடுதலாக, 3 வருடங்களுக்குப் பிறகு 20% நீண்டகால கேப்பிட்டல் கெயின்களையும் பெற்றுத் தருவதால், 3 வருடங்களுக்கு FD-யில் சேமிப்பதை விட அதே கால அளவுக்கு FMPகளில் முதலீடு செய்வது அதிக லாபமானது.  

வெளிநாட்டுச் சுற்றுலா, பிள்ளைகளின் கல்வி, வீட்டுக் கடனுக்கான டவுன் பேமென்ட் போன்ற அடுத்த 3-5 வருடங்களில் வரவுள்ள பெரிய இலக்குகளுக்காக பணம் சேமிக்க விரும்பினால், கிட்டத்தட்ட உங்களுக்கு அந்தப் பணம் தேவைப்படும் சமயத்தில் முதிர்வடையும் வகையில் கால அளவைத் தேர்ந்தெடுத்து ஒரு FMP-யில் முதலீடு செய்யலாம். அப்படி ஏதும் இலக்குகள் இல்லை, ஆனால் கையில் வைத்திருந்தால் பணம் செலவாகிக் கரைந்துவிடும் என்று அஞ்சினால், அதற்கும் உங்கள் பணத்தைக் கட்டிப்போட்டுக் காக்க FMPகளில் முதலீடு செய்வது சிறந்த வழியாகும். ஏனெனில் FMPகளில் ஒரு மாதம் முதல் 5 வருடங்கள் வரை நீங்கள் விரும்பும் முதிர்வுக் காலத்தைத் தேர்வுசெய்துகொள்ள முடியும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்