டெப்ட் ஃபண்டுகளில் யார் முதலீடு செய்யலாம்?

டெப்ட் ஃபண்ட்களில் யார் முதலீடு செய்யலாம்? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

அதிக புரதம் அல்லது கார்போஹைட்ரேட் அல்லது வைட்டமின்களை யார் அதிகம் சாப்பிட வேண்டும்? என்று யாரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்?

அனைவருமே!

எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் அனைவருக்கும் தேவை. ஆனால், ஒவ்வொருவரின் வயது மற்றும் உடல் தேவைகளைச் சார்ந்து ஊட்டச்சத்துக்களின் அளவு மாறுபடும். உதாரணத்திற்கு, பெரியவர்களை விட, வளரும் குழந்தைகளுக்கு அதிக புரதங்களும், கார்போஹைட்ரேட்களும் தேவை. ஆற்றல் செறிந்த கார்போஹைட்ரேட்களை போதுமான அளவில் அவர்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவுக்கும் இதே கோட்பாடு பொருந்துகிறது.

ஒவ்வொருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிலும் ஈக்விட்டி, டெப்ட்ஃபண்ட்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற சொத்து வகைகள் என கலவையாக முதலீடு இருக்க வேண்டும்.ஆனால், ஒவ்வொரு சொத்து வகையின் அளவும் நபருக்கு நபர் மாறுபடும்.இதனால், டெப்ட்ஃபண்ட்கள் போன்ற நிலையான வருமானத்தைக் கொடுக்கும் சொத்து வகைகளை ஓரளவாவது ஒருவர் வைத்திருக்க வேண்டும்.30-களில் இருக்கும் இளைஞர்களை விட, மூத்த குடிமக்கள், தங்களின் போர்ட்ஃபோலியோவில் அதிக டெப்ட் ஃபண்ட் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.இளைஞர்களின் மத்தியில், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத மற்றும் பாதுகாப்பை அதிகம் விரும்பும் முதலீட்டாளர், டெப்ட்ஃபண்ட்களில் அதிகம் முதலீடு செய்யலாம்.ஒரு முக்கிய விதியாக, உங்கள் வயதுக்குச் சமமான அளவுகளில் டெப்ட் ஃபண்ட்கள் போன்ற நிலையான வருமானத்தை வழங்கக்கூடிய சொத்து வகைகளில் நீங்கள் முதலீட்டை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்குபவர்களும், டெப்ட்ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.

398
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்