ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது டெப்ட் ஃபண்ட்கள் எதனால் குறைந்த ரிட்டர்ன்களை வழங்குகின்றன?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது டெப்ட் ஃபண்ட்கள் எதனால் குறைந்த ரிட்டர்ன்களை வழங்குகின்றன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்கள், மியூச்சுவல் ஃபண்ட்ஸால் செய்யப்படும் முதலீட்டு வகையையும், அந்த முதலீடுகளுடன் தொடர்புடைய ரிஸ்க்குகளையும் சார்ந்து இருக்கும். சமோசாவின் சுவையை ஒப்பிடும் போது கேக்கின் சுவை மாறுபட்டு இருக்கும். ஏனென்றால், அவை இரண்டுமே வெவ்வேறு உட்பொருட்களைக் கொண்டு, வெவ்வேறு விதமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதேபோன்று, ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட்கள் இரண்டும் தங்களின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் செக்யூரிட்டிகளின் தன்மைகள் மற்றும் இந்த செக்யூரிட்டிகள் அவற்றின் ரிட்டர்ன்களை உருவாக்கும் விதத்தின் காரணமாக வெவ்வேறு வகையான ரிட்டர்ன்களை வழங்குகின்றன.

இவற்றின் காரணமாக மாறுபட்ட வகையான ரிட்டர்ன்களை வழங்குகின்றன. டெப்ட் ஃபண்டுகள், வட்டிகளை வழங்கக்கூடிய பாண்டுகள், டெப்ட் பத்திரங்கள் மற்றும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்திடும். இந்த மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு இந்த செக்யூரிட்டிகள், வழக்கமான கால இடைவெளிகளில் ஒரு நிலையான வட்டித் தொகையை வழங்குவதற்கு உறுதியளித்திடும். இதன் வட்டி வீதங்கள், கிட்டத்தட்ட சந்தையில் இருக்கக்கூடிய நடப்பு வட்டி வீதங்களுக்கு சமமாக இருக்கும். இந்த செக்யூரிட்டிகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய்விடக்கூடிய வாய்ப்புள்ளது என்பதால், இதுபோன்ற முதலீடுகளில் இருக்கக்கூடிய ரிஸ்க்குகளுக்கு ஈடாக, நடப்பு வட்டி வீதங்களை விட அதிக வட்டியை வழங்குவதற்கு இவை வாக்குறுதி அளித்திடும். புதிதாக வந்துள்ள நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, நன்கு நிலை நாட்டப்பட்ட நிறுவனங்களின் பாண்டுகளுக்கு புதிய நிறுவனங்களைக் காட்டிலும் உயர் கிரெடிட் ரேட்டிங் இருக்கும் என்பதால் அவை தங்களின் பாண்டுகளுக்கு குறைவான வட்டியை (குறைந்த ரிஸ்க் கொண்ட பிரீமியம்) வழங்கலாம்.

முதலீடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் ரிட்டர்ன்கள், அத்துடன் தொடர்புடைய ரிஸ்க்குடன் நேரடித் தொடர்பு கொண்டவை. வழக்கமாக, ஈக்விட்டிகளை விட டெப்ட் செக்யூரிட்டிகள் குறைந்த ரிஸ்க் கொண்டவையாக கருதப்படுகின்றன. ஈக்விட்டி ஃபண்ட்களைப் போன்று அல்லாது, டெப்ட் ஃபண்ட்கள், குறைந்த ரிஸ்க் கொண்டவை என்பதால் முதலீடுகளுக்கு குறைந்த ரிட்டர்ன்களை வழங்கிடும்.

348
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்