7 காரணங்கள்: ஏன் உங்கள் ஓய்வுக்காலத் திட்டமிடலை விரைவில் தொடங்க வேண்டும்

பணி ஓய்வுக்கான திட்டத்தை ஏன் சீக்கிரமே தொடங்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள் zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

பணி ஓய்வுக்கான திட்டத்தை சீக்கிரமே தொடங்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது. வீட்டிற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல பணி ஓய்வுத் திட்டம் வெற்றி பெறுவதற்கு வலிமையான நிதி ஆதாரம் மிகவும் முக்கியம்.

வீட்டைக் கட்டுவதில் முதல் வேலை என்னவென்றால் அதற்கான புளூபிரிண்ட்டை உருவாக்குவதும் வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களைக் கண்டறிவதும்தான். பணி ஓய்வும் இது போன்றதுதான். பணி ஓய்வு பெறக்கூடிய காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிதி ஆதாயத்தை அடைய எந்த முதலீட்டு வழிகள் உதவும் என்பதை கண்டறிய வேண்டும்.

கட்டுமானப் பணி நடைபெறும்போது, அதன் முன்னேற்றத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்வதும் அந்தக் கட்டிடம் நம் நோக்கத்திற்கு ஏற்றதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும் மிக அவசியம். அதே வகையில் உங்கள் போர்ட்ஃபோலியோவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து தேவைப்பட்டால் அதை உங்கள் நிதி லட்சியங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடைசியாக, வீடு கட்டி முடிக்கப்பட்டதும், வாழ்வதற்கு சௌகரியமான பாதுகாப்பான இடம் உங்களுக்கு இருக்கும். அதுபோலவே, சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான விஷயங்களை தொடக்கக் காலத்திலேயே பொறுப்புணர்ச்சியோடு அணுகினால் உங்களின் பணி ஓய்வுக் காலம் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

பணி ஓய்வுத் திட்டத்தை சீக்கிரம் தொடங்க வேண்டியதற்கான ஏழு காரணங்களைப் பார்ப்போம்

1. விலைவாசிகள் அதிகரித்தபடி இருக்கிறது
இந்தியாவில் விலைவாசி தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பணி ஓய்வுக் காலத்திற்காக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேமிக்கக் தொடங்குவது என்பது மிக முக்கியம். அப்போதுதான் பணி ஓய்வுக் காலத்திலும் உங்கள் வாழ்க்கைத் தரம் இப்போது போலவே தொடரும்.

2. பணவீக்கம் உங்கள் முதலீடுகளைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை காலப்போக்கில் அதிகரிக்கும் விகிதமே பணவீக்கம் எனப்படும். சரியாகத் திட்டமிடவில்லை என்றால், பணவீக்கம் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்து உங்கள் முதலீடுகளையே தூக்கிச் சாப்பிட்டுவிடும். முதலீடு செய்வதில் தாமதம் செய்தால் பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகரிக்கும். 

3. உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க கால அவகாசம் கிடைக்கும்
முடிந்தளவு சீக்கிரமே உங்கள் பணி ஓய்வைத் திட்டமிடுவதால் தேவைக்கு ஏற்ப உங்கள் முதலீட்டின் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் கிடைக்கும். இது ரிஸ்க்கைச் சிறப்பாகக் கையாளவும் உங்கள் லாபத்தை அதிகரிக்கவும் காலப்போக்கில் உதவியாக இருக்கும். சந்தேகம் எழும்போது வழிகாட்டுதலுக்கும் ஆலோசனைக்கும் உங்களின் நிதி ஆலோசகர்களைத் தொடர்புகொள்ளவும்.

4. காம்பவுண்டிங்கால் கிடைக்கும் லாபம்
முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய்கள், காம்பவுண்டிங் என்ற செயல்முறையின் மூலம் மீண்டும் முதலீடு செய்யப்படும். இதன்மூலம் காலப்போக்கில் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும். உங்கள் பணி ஓய்வுக்கான திட்டத்தை சீக்கிரமே தொடங்குவதால் காம்பவுண்டிங்கின் பலனைப் பயன்படுத்திக்கொள்ள உங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும். இதனால் உங்கள் முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை அடையாலாம். உதாரணம்:

விவரங்கள்

25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குதல்

30 வயதில் முதலீடு செய்யத் தொடங்குதல்

35 வயதில் முதலீடு செய்யத் தொடங்குதல்

பணி ஓய்வு பெறும் காலம் (60 வயதில் ஓய்வு பெறுவதாக வைத்துக்கொள்வோம்) (a)

35

30

25

ஒரு மாதத்தில் முதலீடு செய்யும் தொகை (b)

Rs 10,000

Rs 10,000

Rs 10,000

முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய தோராயமான லாபம்*

10%

10%

10%

முதலீடு செய்த தொகை

Rs 42 லட்சம்

Rs 36 லட்சம்

Rs 30 லட்சம்

லாபத்துடன் சேர்த்து மொத்த கார்பஸ் தொகை

Rs 3.8 கோடி

Rs 2.26 கோடி

RS 1.34 கோடி

தாமதமான முதலீட்டுக்கான செலவு

-

Rs 1.2 கோடி

Rs 2.5 கோடி

* மேலே குறிப்பிட்டவை உதாரண நோக்கத்திற்கு மட்டுமே சொல்லப்பட்டவை. முதலீட்டுத் தொகை இந்த சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும: a*b*12. மொத்த லாபத்துடன் சேர்கின்ற கார்பஸ் தொகை SIP கால்குலேட்டர் மூலம் கணக்கிடப்படும். தாமதமான முதலீட்டின் விலையானது 25 வயதில் இருந்து சேர்ந்த மொத்தக் கார்பஸ் தொகையில் இருந்து குறிப்பிட்ட வயதில், சேர்ந்த மொத்த கார்பஸ் தொகையைக் கழிப்பதன் மூலம் கணக்கிடப்படும்.

5. லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு    
சீக்கிரமே முதலீடு செய்யத் தொடங்குவதால் நீண்டகால அடிப்படையில் அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்கு அதிகக் கால அவகாசம் கொடுப்பதன் மூலம் உங்கள் பணி ஓய்வுக் காலத்திற்கான சேமிப்பு வேகமாக வளர்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். இதனால் பணி ஓய்வுக் காலத்தில் உங்கள் நிதித் தேவைகளுக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளலாம்.

6. முன்கூட்டியே திட்டமிடுவதால் உங்கள் மன அழுத்தம் குறையும்
நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ அந்தளவிற்கு எதிர்காலத்திற்குத் திட்டமிடுவதும் சேமிப்பதும் எளிதாக அமையும். இதனால் மன அழுத்தமும் குறையும். 

7. உங்கள் விருப்பப்படி பணி ஓய்வு பெறுங்கள்
சீக்கிரமே பணி ஓய்வுத் திட்டத்தைத் தொடங்குவதால் எப்படி எப்போது ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். அதோடு, இளம் வயதில் உங்களுக்குக் குறைந்த பொறுப்புகளே இருக்கும் என்பதால் பணி ஓய்வுத் திட்டத்தில் முதலீடு செய்வது எளிதாகும். இப்படிச் செய்வதால் நீங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பியபடி ஓய்வு பெறலாம். விருப்பமில்லாமல் நீண்டநாட்கள் பணி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது.


இறுதி ஆலோசனை

உங்கள் பணி ஓய்வுக் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பணி ஓய்வுத் திட்டத்தை மேற்கொள்வது அவசியமாகும். சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், குறிப்பாக ஓய்வுத் திட்டத்திற்கு என்றே தீர்வு அடிப்படையிலான திட்டங்களின் வகையின்கீழ் வரும். இருந்தாலும், நீங்கள் பிற வகையான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து அதை பணி ஓய்வுக் காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவது நல்லது. இருந்தாலும், அதிக பிரீமியம் தொகை செலுத்த வேண்டிய ரிஸ்க்குக்கு ஆளாகும் வகையில் பணி ஓய்வுத் திட்டத்தைத் தாமதப்படுத்தாமல் இருப்பது முக்கியமாகும்.
 

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்