ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்வதில் முதலீட்டு ஆலோசகர் அல்லது மியூச்சுவல் ஃபண்டு விநியோகஸ்தரின் பணி என்ன?

ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் முதலீட்டு ஆலோசகர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரின் பங்கு என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

வழக்கமாக, முதலீட்டாளர்கள், திட்டங்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் போது, அவற்றின் செயல்திறனின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். திட்டங்களின் செயல்திறன், எப்போதும் கடந்தகாலத்தை போன்று இருக்காது என்பதை அவர்கள் கருதமாட்டார்கள். திட்டங்கள் குறித்த மதிப்பீடு என்பது வெவ்வேறு அம்சங்களின் செயல்பாடுகளைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, திட்டத்தின் நோக்கம், முதலீட்டுத் தொகுப்பு, ஃபண்ட் எடுக்கக்கூடிய அபாயம் (ரிஸ்க்) போன்றவை. இதற்கு, முதலீட்டாளர்கள் தங்களின் நேரத்தையும், முயற்சியையும் செலவிட வேண்டும். இந்தத் தேர்வுகளுக்கான பகுப்பாய்வைச் செய்வதற்கும், ஒப்பீட்டைச் செய்வதற்கும், அம்சங்கள் மற்றும் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதற்கான போதுமான நிபுணத்துவமும், திறனும் முதலீட்டாளருக்கு இருக்க வேண்டும். அதே சமயம், இதுபோன்ற வேலைக்கு, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தர் அல்லது முதலீட்டு ஆலோசகர் தகுதி பெற்றவர்களாக இருப்பர்.

இரண்டாவதாக, சிறந்த திட்டத்தில் முதலீடு செய்வதை விட, முக்கியமாக, முதலீட்டாளரின் தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளரின் சூழ்நிலை என்ன என்பதை அவர் அறிந்திருந்தாலும், ஒரு நல்ல ஆலோசகர் அல்லது விநியோகஸ்தர் சரியான கேள்விகளைக் கேட்டு, கண்ணோட்டத்துக்கு ஏற்ப முதலீட்டை மேற்கொள்ள செய்திடுவர்.

போர்ட்ஃபோலியோ அமைக்கப்பட்ட பின்பு, திட்டத்தின் அம்சங்களையும், போர்ட்ஃபோலியோவையும் வழக்கமாகக் கண்காணிக்க வேண்டும். இது தொடர்ந்து செய்யப்பட வேண்டும். இந்தத் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கும் ஆலோசகர்/விநியோகஸ்தர் உங்களுக்கு உதவிடுவார்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்