டெப்ட் ஃபண்டுகளில் ரிஸ்க் இல்லையா?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டெப்ட் ஃபண்ட்கள் ஈக்விட்டிகளில் முதலீடு செய்வதில்லை என்பதால் அவை ரிஸ்க் இல்லாதவை என்ற தவறான கருத்து உள்ளது. ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் டெப்ட் ஃபண்ட்கள் ரிஸ்க் குறைவானவை என்பது உண்மையே. ஆனால் உங்கள் பணத்தை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள் என்று உத்தரவாதம் உண்டு என்று எடுத்துக்கொள்ள முடியாது. டெப்ட் ஃபண்ட்கள், டெப்ட் மற்றும் மணி மார்க்கெட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கின்றன. ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்கின்ற ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு ரிஸ்க்குகளால் பாதிக்கப்படக் கூடியவை. 

டெப்ட் ஃபண்ட்கள் வட்டி விகித ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க், லிக்விடிட்டி ரிஸ்க் போன்றவற்றால் பாதிக்கப்படக் கூடியவை, இவையெல்லாம் நமக்கு நன்கு தெரிந்த மார்க்கெட் ரிஸ்க்கிலிருந்து மிகவும் வேறுபட்ட ரிஸ்க் வகைகளாகும். ஸ்டாக் மார்க்கெட் ரிஸ்க்குகளைப் போல இந்த ரிஸ்க் காரணிகள் பற்றி தினந்தோறும் அதிகம் பேசப்படுவதில்லை என்றாலும், அவற்றை முற்றிலுமாகப் புறந்தள்ள முடியாது.

வட்டி விகித ரிஸ்க் என்பது, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது. இது டெப்ட் ஃபண்ட்கள் முதலீடு செய்துள்ள பாண்ட்களின் விலைகளைப் பாதிக்கிறது. கிரெடிட் ரிஸ்க் என்பது, டெப்ட் ஃபண்ட் முதலீடு செய்திருக்கும் பாண்ட்களுக்குரிய நிறுவனங்களில் ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்படும்போது உண்டாகிறது. ஏனெனில் இந்த பாண்ட்களின் மீதான வட்டி மற்றும் அசலின் பேமென்ட் என்பது மிக மிக நிச்சயமற்றதாக இருக்கும். அடிக்கடி வர்த்தகம் செய்யப்படாத டெப்ட் செக்யூரிட்டிகளில் லிக்விடிட்டி ரிஸ்க் ஏற்படும், அதாவது இந்த செக்யூரிட்டிகளை தனது போர்ட்ஃபோலியோவில் சாதகமற்ற சூழல்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஃபண்ட் தள்ளப்படலாம். ஆகவே, டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்வதென்பது ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் ரிஸ்க் குறைவானது தான், ஆனால் முற்றிலும் ரிஸ்க் இல்லாததல்ல.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்