Skip to main content

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர்

தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்கள் SIP-ஐ அதிகரித்துக்கொண்டே செல்லும்போது உங்கள் SIP முதலீடுகளின் எதிர்கால மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று கணக்கிடுங்கள்.

%
%
வருடங்கள்

முதலீடு செய்த தொகை0

எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன்கள்

0

மொத்த மதிப்பு (ஸ்டெப்-அப் உடன்)

0

மொத்த மதிப்பு (ஸ்டெப்-அப் இல்லாமல்)

0

வேறுபாடு

0

பொறுப்புதுறப்பு

  1. கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
  2. இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
  3. மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.
  4. பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

பிற கால்குலேட்டர்கள்

goal sip calculator
இலக்கு (கோல்) SIP கால்குலேட்டர்

உங்கள் இலக்கை அடையத் தேவையான மாதாந்திர SIP முதலீட்டைக் கண்டறியுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
smart goal calculator
ஸ்மார்ட் கோல் கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, தேவையான SIP அல்லது லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
inflation calculator
இன்ஃபிளேஷன் (பணவீக்க) கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய செலவினங்கள் மற்றும் எதிர்கால இலக்குகளின் மீது பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கணக்கிடுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்
Cost of delay calculator
தாமதத்தின் விலை (காஸ்ட் ஆஃப் டிலே) கால்குலேட்டர்

முதலீட்டைத் தாமதிக்கப் போகிறீர்களா? உங்கள் செல்வப் பெருக்கத்தில் அந்தத் தாமதம் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போதே கணக்கிடுங்கள்

கால்குலேட்டர்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

finance-planning
எங்கிருந்தும் நிதித் திட்டமிடலாம்
saves-time
நேரத்தை சேமிக்கலாம்
easy-to-use
பயன்படுத்த எளிதானது
helps-make-informed-decisions
விவரமான முடிவுகளை எடுக்க உதவுகிறது

ஸ்டெப்-அப் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்றால் என்ன?

ஸ்டெப்-அப் SIP என்பது காலப்போக்கில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் படிப்படியாக அதிகரிப்பதைக் குறிக்கிறது. நிலையான காலமுறைத் தவணைகளைக் கொண்ட பாரம்பரிய SIPகளைப் போலல்லாமல், ஸ்டெப்-அப் SIPகளில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்களிப்பை படிப்படியாக அதிகரிக்க முடியும், இதனால் வருமான அதிகரிப்பு மற்றும் நிதி இலக்குகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு முதலீடு ஈடுகொடுக்க முடிகிறது. SIP தொகையை அதிகரிப்பதன் பலன்களை அளவிட, முதலீட்டாளர்கள் எதிர்கால முதலீட்டு மதிப்புகளை மதிப்பிடுவதற்கும், அவர்களின் இலக்குகளை அடையும் நோக்கத்திற்காக பொருத்தமான வருடாந்திர அதிகரிப்புகளைத் தீர்மானிப்பதற்கும் ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் என்றால் என்ன?

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் என்பது முதலீட்டாளர்களுக்கு தங்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானின் (SIP) எதிர்கால மதிப்பைக் கணிப்பதில் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். இது முதலீட்டாளர்கள் தங்கள் SIP விருப்பத்தேர்வுகள் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஒத்துப்போகும் வகையில் உகந்த வருடாந்திர அதிகரிப்பைத் தீர்மானிக்க உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, 2020-இல் மாதத்திற்கு ₹10,000 ஆரம்ப SIP முதலீட்டில் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஸ்டெப்-அப் SIP பிளானில், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் மாதாந்திர SIP பங்களிப்பை 5% அதிகரிக்க முடிவுசெய்கிறீர்கள். இதனால், 2021-ஆம் ஆண்டில், உங்கள் SIP பங்களிப்பு மாதத்திற்கு ₹10,500 ஆகியிருக்கும். 2022-இல், இது மாதத்திற்கு ₹11,025 ஆகியிருக்கும். உங்களின் தற்போதைய வருமானம், திட்டமிடப்பட்ட வருடாந்திர அதிகரிப்பு மற்றும் நிதி நோக்கங்களின் அடிப்படையில் இந்த உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரைப் பயன்படுத்தி, இந்த அதிகரிக்கும் பங்களிப்புகளுடன் உங்கள் முதலீடுகள் காலப்போக்கில் எப்படி அதிகரிக்கும் என்பதை நீங்கள் திட்டமிட்டுக் காட்சிப்படுத்தலாம். இதன்மூலம், உங்கள் முதலீடுகள் பற்றிய தகவலறிந்த முடிவுகளை நீங்கள் எடுக்கலாம் மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு உங்கள் நிதி இலக்குகளை அடைவதை உறுதிசெய்யலாம்.

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானது (MFSH) ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் என்பது ஆரம்பநிலையில் இருப்பவர்களும்கூட அணுகக்கூடிய, பயனர்களுக்கு ஏற்ற ஆன்லைன் கருவியாகும். அதைப் பயன்படுத்த, நீங்கள் பின்வரும் விவரங்களை உள்ளிட வேண்டும்:

a. ஆரம்ப மாதாந்திர SIP முதலீட்டுத் தொகை

b. SIP கால அளவு (ஆண்டுகளில்)

c. முதலீட்டில் எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் விகிதம்

d. மாதாந்திர SIP-க்கான வருடாந்திர சதவீத அதிகரிப்புத் தொகை

இந்த விவரங்கள் வழங்கப்பட்டவுடன், கால்குலேட்டர் உங்கள் SIP முதலீட்டின் மதிப்பிடப்பட்ட எதிர்கால மதிப்பைக் கணக்கிடுகிறது, இது நிதித் திட்டமிடலுக்கும் இலக்கை அமைப்பதற்கும் உதவுகிறது.

ஸ்டெப்-அப் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ரிட்டர்ன்களைக் கணக்கிடுவதற்கான ஃபார்முலா

உங்கள் ஸ்டெப்-அப் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானின் (SIP) இறுதி மதிப்பு, உங்கள் முதலீடுகளின் மார்க்கெட் செயல்திறனால் பாதிக்கப்படும். இருப்பினும், ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் எதிர்கால மதிப்பைக் கணக்கிட இந்தச்ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது:

எதிர்கால மதிப்பு (FV) = P * [(1 + r/n)^(nt) – 1 / (r/n)] + (S * [(1 + r/n)^(nt) – 1 / (r/n)])

இங்கு:

P: ஆரம்ப முதலீடு

r/n: ரிட்டர்ன் விகிதம்

nt: கூட்டு கால அளவு

S: மாதாந்திர SIP-க்கான வருடாந்திர அதிகரிப்புத் தொகை

கீழே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகளுடன் ஒரு ஸ்டெப்-அப் SIP-இல் முதலீட்டாளர் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்:

  • ஆரம்ப முதலீட்டுத் தொகை: ரூ. 5,000
  • அதிகரிப்பு விகிதம்: 10%
  • முதலீடு செய்யும் வருடங்கள்: 10 வருடங்கள்
  • எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன் விகிதம்: 12%

அவரது முதலீட்டின் மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன்கள் இப்படி இருக்கும்:

  • முதலீடு செய்யப்பட்ட தொகை: ரூ. 9,56,245
  • மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன்கள்: ரூ. 7,30,918
  • மொத்த மதிப்பு: ரூ. 16,87,163

MFSH ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரை எப்படிப் பயன்படுத்துவது?

MFSH ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துவது சில எளிய படிகளைக் கொண்ட எளிய செயல்முறையாகும். அவை:

படி 1: MFSH ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரில் நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை உள்ளிடவும்.

படி 2: மியூச்சுவல் ஃபண்ட் ஸ்டெப்-அப் கால்குலேட்டரில் முதலீட்டு முதிர்வுக்கான விருப்பமான காலம் அல்லது கால அளவைக் குறிப்பிடவும்.

படி 3: கால்குலேட்டரில் மதிப்பிடப்பட்ட வட்டி மற்றும் ஸ்டெப்-அப் சதவீதங்களை நிரப்பவும்.

படி 4: அனைத்துப் புலங்களும் துல்லியமாக நிரப்பப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.

படி 5: முடிவுகளை உருவாக்க, 'கணக்கிடு' பட்டனைக் கிளிக் செய்யவும்.

உங்கள் முதலீட்டுத் திட்டமிடலுக்காக வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

MFSH ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் பலன்கள்

1. இலக்கு சார்ந்த முதலீடு

குறிப்பாக, ஸ்டெப்-அப் SIPகள் குறிப்பிட்ட நிதி இலக்குகளைக் கொண்ட நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் முதலீட்டாளர்களுக்கு இந்த இலக்குகளை திறம்படப் பூர்த்திசெய்ய தங்கள் முதலீடுகளை மாற்றியமைக்க அதிகாரம் வழங்குகிறது.

2. ஒழுக்கமான முதலீடு

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் முதலீட்டுத் தொகையை அதிகரிக்கும் செயல்முறையைத் தானியக்கமாக்குவதன் மூலம் ஒழுக்கமான முதலீட்டை ஊக்குவிக்கிறது. இது நேரடிக் கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்களின் தேவையை நீக்குகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளில் நிலைத்தன்மையுடன் இருக்க அனுமதிக்கிறது.

3. நெகிழ்வுத்தன்மை மற்றும் தனிப்பயனாக்கம்

ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் முதலீட்டாளர்களுக்கு மாறும் நிதிச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முதலீட்டுத் தொகையை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. வருமான அதிகரிப்பை எதிர்பார்க்கும் அல்லது எதிர்காலத்தில் குறிப்பிட்ட நிதி மைல்கற்களைக் கொண்ட நபர்களுக்கு இது உதவுகிறது, அதற்கேற்ப அவர்களின் முதலீடுகளைத் திட்டமிடவும் உதவுகிறது.

4. பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைத்தல்

பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் வாங்கும் திறனைக் குறைக்கிறது. ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டர் பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவுகிறது, முதலீட்டுத் தொகைகள் விலை உயர்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருப்பதை உறுதிசெய்கிறது. முதலீட்டை அவ்வப்போது அதிகரிப்பதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் மதிப்பைப் பராமரிக்கலாம் மற்றும் பணவீக்கத்தின் விளைவுகளுக்கு எதிராகத் தங்களைப் பாதுகாக்கலாம்.

பொதுவான கேள்விகள்

ஸ்டெப்-அப் SIPகள் என்பவை மியூச்சுவல் ஃபண்ட் பங்களிப்புகளைப் படிப்படியாக அதிகரிப்பதற்கான பன்முகத்தன்மை கொண்ட ஒரு வழிமுறையாகும். வழக்கமான SIPகளில் இருந்து மாறுபட்டு, ஸ்டெப்-அப் SIPகள் முதலீட்டுத் தொகைகளைப் படிப்படியாக உயர்த்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன, வளரும் நிதிச் சூழ்நிலைகள் மற்றும் நோக்கங்களுக்கு இடமளிக்கின்றன, மேலும் இவை முதலீட்டுத் தகுதி முதலீட்டாளரைப் பொறுத்ததாகும்.