ஓவர்நைட் ஃபண்டுகள் எப்படி லிக்விட் ஃபண்டுகளில் இருந்து வேறுபடுகின்றன?

லிக்விட் ஃபண்ட்களில் இருந்து ஓவர்நைட் ஃபண்ட்கள் எவ்வாறு வேறுபடுகின்றன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

டெப்ட் ஃபண்ட்களில், லிக்விட் ஃபண்ட்களை விடக் குறைந்த இடத்தில் வைத்தே ஓவர்நைட் ஃபண்ட்கள் அறியப்படுகின்றன. ஓவர்நைட் ஃபண்ட்கள் அடுத்த ஒரு நாளில் முதிர்வடைகின்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்திடும். லிக்விட் ஃபண்ட்கள் 91 நாட்களில் முதிர்வடையக்கூடிய கடன் பத்திரங்களில் (செக்யூரிட்டிகள்) முதலீடு செய்திடும் இதனால், ஓவர்நைட் ஃபண்ட்களை விட  லிக்விட் ஃபண்ட்களில் வட்டிவீத ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க் மற்றும் பணம் செலுத்தத் தவறுதல் ரிஸ்க் போன்றவை அதிகம். ஏனென்றால், முதிர்வடையும் செக்யூரிட்டிகளை ஃபண்ட் மேனேஜர் விற்பனை செய்த அடுத்த நாளே ஓவர்நைட் ஃபண்ட்களில் பணம் வரவு வைக்கப்படும்.

ஓவர்நைட் ஃபண்ட்களில் வெளியேற்றக் கட்டணம் கிடையாது என்பதால், உங்களிடமுள்ள அதிகப்படியான கையிருப்புப் பணத்தை ஒரு வாரத்திற்குக் குறைவாக முதலீடு செய்வதற்கு இது ஏற்றது. லிக்விட் ஃபண்ட்கள் ஆறு நாட்கள் வரை தரப்படுத்தப்பட்ட வெளியேற்றக் கட்டணத்தைக் கொண்டுள்ளன மற்றும் 7வது நாளுக்குப் பிறகு வெளியேற்றக் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது. லிக்விட் ஃபண்ட்களை 91 நாட்களுக்குள் முதிர்வடைகின்ற CD மற்றும் CP போன்ற பணச்சந்தை சார்ந்த கருவிகளில் முதலீடு செய்யமுடியும். மேலும் அவற்றின் கிரெடிட் தரம் ஒரு பொருட்டாகக் கருதப்படாது. இதனால் இவை ஓவர்நைட் ஃபண்ட்களை விட அதிக கிரெடிட் ரிஸ்க்கைக் கொண்டிருக்கலாம்.

ஓவர்நைட் ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, லிக்விட் ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவின் நீண்டகால முதிர்வு காரணமாக அவற்றின் கிரெடிட் ரிஸ்க்கை நிர்வகிப்பது சற்று எளிது. எந்த நேரத்திலும் எளிதாகப் பணமெடுக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருந்தால், ஓவர்நைட் ஃபண்ட்களை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். உங்களிடம் உள்ள அதிகப்படியான கையிருப்பை சுமார் ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்திற்கு முதலீடு செய்து ரிட்டர்ன் பெற விரும்பினால், நீங்கள் லிக்விட் ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்