மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஓய்வுக்கால கார்பஸை எப்படி உருவாக்குவது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?

நாம் பணிபுரியும் காலத்தைவிட பணி ஓய்வுக்குப் பிறகு வாழும் காலம் நீண்டதாக இருக்கும், என்பதையும், நமக்கு குறைந்தது 25-30 வருடங்களுக்குப் போதுமான பெரிய தொகை தேவைப்படும் என்பதையும் பலர் உணர்வதில்லை. சரியான நிதித் திட்டமிடல் இல்லாவிட்டால், எல்லா செலவுகளையும் அவசரத் தேவைகளையும் சமாளிக்க உங்கள் சேமிப்புகள் போதுமானதாக இருக்காது. பணி ஓய்வுக் காலத்தில் 25-30 வருடங்களுக்கு நீடிக்கும்படியான பெருந்தொகையை எப்படி சேமிப்பது? முதலில், எங்கள் பணவீக்க கால்குலேட்டரைப் பயன்படுத்தி, பணி ஓய்வுக்குப் பிறகான வருடங்களில் உங்கள் வருடாந்திர செலவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். பணி ஓய்வுக்குப் பிறகான பெருந்தொகையைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்ததும், நீங்கள் மேலே குறிப்பிட்ட கால்குலேட்டரின்  மூலம் கண்டறிந்த பெருந்தொகையைச் சேமிக்க, பணிபுரியும் வருடங்களில் இப்போது நீங்கள் எவ்வளவு மாதாந்திர SIP முதலீடுகளைத் தொடங்க வேண்டும் என்பதைக் கணக்கிட எங்கள் கோல் SIP கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். உங்கள் மாதாந்திர வருமானத்திலேயே SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய முடியும், பெரிய சுமையாக இருக்காது என்பதே இதன் சிறப்பம்சம்.

அடுத்து, உங்கள் ரிஸ்க் தயார்நிலைக்கு ஏற்ப, நீண்ட கால சேமிப்புக்கான சில மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேர்வுசெய்யுங்கள். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய ஈக்விட்டி ஃபண்ட்களே பரிந்துரைக்கப்படுகின்றன, எனினும் நீங்கள் டெப்ட் அல்லது ஹைப்ரிட் ஃபண்ட்களையும் தேர்வுசெய்யலாம். உங்கள்  ரிட்டர்ன்  எதிர்பார்ப்புக்குப் பொருந்தக்கூடிய வகை மற்றும் பிரிவைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களைத் தேர்வுசெய்யுங்கள்.

நல்ல தொடக்கமே பாதி வெற்றிதான். ஆரம்பத்திலேயே ஓர் ஒழுங்கான பழக்கத்தை கொண்டு வந்துவிட்டால், உங்கள் மகிழ்ச்சியான பணி ஓய்வுக் காலத்திற்கு உதவும்படியான ஒரு நல்ல நிதி இலக்கை அடைவது எளிதாக இருக்கும்.

343
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்